இலங்கை முஸ்லீம் அமைச்சர் நீக்கம்
கொழும்பு:
இலங்கையில் அதிபர் சந்திரிகா தலைமையிலான மக்கள் கூட்டணியில் இடம் பெற்றிருந்த இலங்கை முஸ்லீம்காங்கிரஸ் தலைவரும், தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சருமான ராப் ஹக்கீம் புதன்கிழமை பதவிநீக்கம்செய்யப்பட்டார்.
இதுகுறித்து இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட செய்தி விவரம்:
இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஹக்கீம், ஆளும்கட்சியான மக்கள் கூட்டணியிலிருந்துவிலகப்போவதாகவும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையப் போவதாகவும் செய்திகள் வந்தன.
அதேநேரம் அதிபர் சந்திரிகா தங்களது கட்சியின் பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அலட்சியம்காட்டுகிறார் என்று ஹக்கீம் கடந்த சில தினங்களாக குற்றம்சாட்டி வந்தார்.
இந்த நிலையில் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி இந்த வார இறுதியில் அதிபர் சந்திரிகா அரசுக்கு எதிராகநம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரவுள்ளதாகக் அறிவித்தது.
இந்த நிலையில் ஹக்கீம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதுகுறித்து அதிகாரப்பூர்வமாக உத்தரவுகள் எதுவும் வரவில்லை என்று ஹக்கீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள்கூறுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இலங்கை நாடாளுமன்றத்தில் சந்திரிகாவின் மக்கள் கூட்டணிக்கு 116 எம்.பிக்கள் உள்ளனர். ஹக்கீம்தலைமையிலான முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்கு 11 எம்.பிக்கள் உள்ளனர்.
ஹக்கீம் பதவிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து முஸ்லீம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் புதன்கிழமை கூடிஆலோசனை நடத்துகின்றனர். கூட்டம் முடிந்ததும், மக்கள் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை இலங்கை முஸ்லீம்காங்கிரஸ் கட்சி வாபஸ் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சியிலேயே பிளவு ஏற்பட்டுள்ளது. ஹக்கீமுக்கு ஆதரவாக 7எம்.பிக்களும், இக்கட்சியின் நிறுவனத் தலைவர் அஷ்ரபின் மனைவி பெரியல் அஷ்ரபுக்கு ஆதரவாக 4எம்.பிக்களும் உள்ளனர். அஷ்ரப் கடந்த செப்டம்பர் மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார் என்பதுநினைவிருக்கலாம்.
மேலும் மக்கள் கூட்டணிக் கட்சியிலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய இலங்கை முஸ்லீம்காங்கிரஸ் கட்சி தீர்மானித்திருந்த நிலையில், மக்கள் கூட்டணி முந்திக் கொண்டு ஹக்கீமை பதவி நீக்கம்செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications