ஐக்கிய அரபு நாட்டில் 33 சதவீதத்தினர் இந்தியர்கள்!
துபாய்:
ஐக்கிய அரபு நாட்டில் (யு.ஏ.ஈ.) இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால், அந்நாட்டுஅரசு மிகவும் கவலை அடைந்துள்ளது. கிட்டத்தட்ட 13 லட்சம் இந்தியர்கள் அங்கு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நாட்டிலுள்ள மக்கள்தொகையில் பாதிப்பேர் இந்தியர்கள் என்றால், அவர்களுக்குக் கடுப்பாகத்தானேஇருக்கும்? இதுபோக, பாகிஸ்தானிலிருந்தும் வங்களாதேசத்திலிருந்தும் ஏராளமான மக்கள் குவிந்துள்ளதால்,ஐக்கிய அரபு நாடு ரொம்பவும் நொந்து போயுள்ளது.
யு.ஏ.ஈயின் மக்கள் தொகையில் 49.6 சதவீதத்தினர் இந்தியா, பாகிஸதான், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள். மொத்தமக்கள் தொகையில் 75 சதவீதத்தினர் வெளிநாட்டவர் என்ற நிலை உருவாகியுள்ளது.
அந் நாட்டில் வாழும் அரபுகளின் எண்ணிக்கை 1968ம் ஆண்டில் 64 சதவீதமாக இருந்தது. 1995ம் ஆண்டில் இது24 சதவீதமாகக் குறைந்தது. 1999ம் ஆண்டில் இது 18 சதவீதமாக சரிந்துவிட்டது. இந்த எண்ணிக்கை தொடர்ந்துசரிந்தும் வருகிறது.
1968ம் ஆண்டிலிருந்தே, இந்நாட்டில் வெளிநாட்டவர்கள் ஆதிக்கம் ஆரம்பமாகி விட்டதாம். இதனால், உள்ளூர்மக்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைய ஆரம்பித்து விட்டது.
இதற்கு என்னதான் காரணமாம்? அங்கு வேலை பார்க்கத் தயாராக இருக்கும் மக்கள் ரொம்பவும் குறைவு. நாட்டின்பொருளாதாரம் கூடாவிட்டாலும், குறையாமலாவது பார்த்துக் கொள்ள வேண்டுமே!
இந்த நோக்கோடுதான், வெளிநாட்டு மக்களை அழைத்து, வேலை போட்டுக் கொடுக்க ஆரம்பித்தது, ஐக்கிய அரபுநாடு குடியரசு.
கடும் உழைப்புக்கு இந்தியர்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் கிடையாது என்பதை வெளிநாட்டு இந்தியர்கள்மூலம்தான் நாம் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில், ஐக்கிய அரபு நாட்டில் இந்தியர்கள் வேலைக்காகக்குவிய ஆரம்பித்தனர். அந் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு மிக அபரிமிதமானது.
ஆனால், அதே நேரத்தில் இந்தியர்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருக ஆரம்பித்தது. இப்படியே போய்க்கொண்டிருந்தால், இன்னும் சில ஆண்டுகளில் அரபு நாட்டினர் யாரும் இருக்க மாட்டார்கள் என்று நினைத்த ஐக்கியஅரபு நாடு, தற்போது தீவிர நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டது.அதோடு, மக்கள் தொகை எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, அதிகமான குழந்தைகளைப் பெற்றெடுக்கவும் தன்நாட்டு மக்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறது ஐக்கிய அரபு நாடு.
யு.ஏ.ஈக்கு அடுத்தபடியாக கத்தார், குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியாவில் அதிகமான எண்ணிக்கையிலானவெளிநாட்டவர்கள் வசித்து பணியாற்றி வருகின்றனர். இந்த நாடுகளின் மொத்த மக்கள்தொகை 2.70 கோடி.இதில் 35 சதவீதத்தினர் வெளிநாட்டவர்கள்.
யு.ஏ.ஈ. மற்றும் கத்தாரில் 75 சதவீதத்தினர் வெளிநாட்டவர்கள். குவைத்தில் 53 சதவீதத்தினர் வெளிநாடுகளைச்சேர்ந்தவர்கள். பஹ்ரைனில் 30 சதவீதத்தினரும் சவுதி அரேபியா, ஓமனில் 27 சதவீதத்தினரும் வெளிநாடுகளைச்சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஒரு சின்ன ரூம் ரூ.5.7 கோடி. புர்ஜ் கலீபாவில் சினிமா பிரபலங்கள் வீடு வாங்கி குவிப்பது ஏன் தெரியுமா -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications