சுதாகரனின் ஜெயில் வாசம் தொடர்கிறது, தந்தைக்கு ஜாமீன்
சென்னை:
கொலை மிரட்டல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின்முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனின் தந்தை விவேகானந்தனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதலாவது செஷன்ஸ்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்புமகன் சுதாகரன் நடத்திவந்த நற்பணி மன்றத்தின் நிர்வாகியாகஇருந்த கோபு ஸ்ரீதர். இவரைத் தாக்கியதாகவும், கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும், சுதாகரன் மீதுகொலை மிரட்டல் வழக்கு தொடரப்பட்டது.
இதே வழக்கு தொடர்பாக சுதாகரனின் தந்தை விவேகானந்தனும் கைது செய்யப்பட்டார். கோபு ஸ்ரீதரின்மனைவியை மிரட்டியதாக விவேகானந்தன் மீது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என கேட்டு விவேகானந்தன் சென்னை முதன்மை செஷன்ஸ்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சின்னப்பன், விவேகானந்தனை ரூ10,000 சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனிலும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இதே போல் முதலில் தொடரப்பட்ட வழக்கிலும் தனக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி சென்னைஉயர் நீதிமன்றத்தில் விவேகானந்தன் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications