விமானத்தில் வெடிகுண்டு புரளி: சிறுவன் கைது
மும்பை:
மும்பை வரும் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகத் தொலைபேசி மூலம் புரளியைக் கிளப்பிய பூனாவைச்சேர்ந்த 13 வயது சிறுவனைப் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து மும்பை ஜெட் ஏர்வேஸ் வெளியிட்டுள்ள செய்தி:
டெல்லியிலிருந்து பூனா செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சனிக்கிழமை மும்பை விமானநிலையத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைபேசியில் பேசியது ஒரு சிறுவன்.
இதையடுத்து டெல்லியிலிருந்து மும்பை வழியாக பூனாவுக்கு செல்லும் 9 டபிள்யூ 363 விமானம் மும்பையில்நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்த விமானத்தில்தான் வெடிகுண்டு வைத்திருப்பதாக அந்தச்சிறுவன் தொலைபேசியில் கூறியிருந்தான்.
பின்னர், வெடிகுண்டு நிபுணர்களும், மோப்ப நாய்ப்படையினரும் அவ்விமானத்தைச் சோதனையிட்டனர்.அப்போது, வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்தத் தகவல் வெறும் புரளி என்று தெரிய வந்தது.
இதையடுத்து தொலைபேசி மூலம் புரளியைக் கிளப்பிய நபர் யார் என்று அடையாளம் காணும் பணி முடுக்கிவிடப்பட்டது. விசாரணையில் பூனாவைச் சேர்ந்த சிறுவன்தான் தொலைபேசி மூலம் புரளியைப் பரப்பியது என்றுதெரிய வந்தது. குற்றவாளி சிறுவனாக இருப்பதால், அவனுடைய பெயர் வெளியிடப்படவில்லை.
இந்தப் புரளியால், டெல்லியிலிருந்து சுமார் 2 மணி நேரம் தாமதமாக அந்த விமானம் பூனா வந்து சேர்ந்தது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications