ஆபரேஷன் "ஜெ ஜெ"
கோவை: சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தேடி அதிரடிப்படையினர் நடத்தி வரும் வேட்டைக்கு "ஜெ.ஜெ ஆபரேஷன் எனப்பெயரிடப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வீரப்பனைத் தேடும் பணியை வியாழக்கிழமை காலை அதிரடிப்படை துவக்கியது. வீரப்பனைப் பிடிக்கஅதிரடிப்படைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள தேவாரம் மற்றும் ஐ.ஜி விஜயகுமார் ஆகியோர் இன்று முறைப்படிதேடுதல் வேட்டையைத் துவக்கினர்.
அதிரடிப்படையினரின் இந்தத் தேடுதல் வேட்டைக்கு "ஜெ.ஜெ ஆபரேஷன் எனப் பெயரிடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெ.ஜெ. என்பது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் "இனிஷியல் என்பதுகுறிப்பிடத்தக்கது.
3,000 போலீஸார் கொண்ட அதிரடிப்படை, 16 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு காட்டுப் பகுதிக்குள்முற்றுகையிட்டுள்ளது. இந்தக் குழுக்கள் புளியங்கோம்பை, கடம்பூர், தாளவாடி, செல்லப்பன்தொட்டி, கெத்தேசால்,ஜெரானாம்பட்டி, உரியாடை, ரம்பையனூர், பெட்டமந்து ஆகிய பகுதிகளில் உள்ள காடுகளில் ஊடுருவினர்.
சத்தியமங்கலத்தில் அருகே உள்ள கேர்மளம் பகுதி, அடர்ந்த காடுகளை உள்ளடக்கியது. இங்கு சில அடி தூரம்முன்னால் செல்லும் நபரைக் கூடப் பார்க்க முடியாத அளவிற்கு மரங்கள் மற்றும் செடி, கொடிகள் மிகுந்திருக்கும்.இந்த முறை வீரப்பனைப் பிடிக்க தீவிர முயற்சிகள், புதிய வியூகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது இந்தத் தேடுதல் வேட்டையில், கமோண்டோ படை, எல்லைப் பாதுகாப்பு படை, கர்நாடக-தமிழகஅதிரடிப்படை ஆகிய வீரர்கள் காட்டுக்குள் செல்கின்றனர். இந்தப்படையினருக்கு சிறப்பு பயிற்சிகளும்அளிக்கப்பட்டுள்ளன. அதிரடிப்படையினருக்கு கையெறி குண்டுகள், சிறிய வகை ராக்கெட்டுகள், பைனாகுலர்கள்,நீண்ட தூரம் இலக்கைச் சுடும் நவீன துப்பாக்கிகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக 5 நாட்களுக்கு தொடர் வேட்டை நடக்கும். பின்னர், தேடுதல் வேட்டையில் ஏற்பட்டுள்ளமுன்னேற்றம், அல்லது பின்னடைவு பற்றி அதிகாரிகளுடன் தேவாரம் ஆலோசனை நடத்துவார். வீரப்பனைப்பிடிக்கும் இந்த முயற்சியில் தேவாரம் வெற்றி பெறுவாரா என்பது விரைவில் தெரிய வரும்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications