பிணத்தை மாற்றிய டாக்டர் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் இறந்து போன பெண் நோயாளியின் பிணம் தவறுதலாகவேறு வீட்டுக்குக் அனுப்பப்பட்டது. இதனால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக டாக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பழமையான கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் மன நோயால் பாதிக்கப்பட்ட விஜயா என்ற பெண் கடந்த11ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இவர் அனுமதிக்கப்பட்ட 15-வது வார்டில் அதே தேதியில் ரமா பாய் என்றபெண்ணும் அனுமதிக்கப்பட்டார்.

இவர்களில் விஜயா 15ம் தேதி இறந்து விட்டார். இதுகுறித்து டாக்டர்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. ஆனால் தவறுதலாக ரமா பாய் தான் இறந்து விட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து ரமாபாயின் வீட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ரமா பாயின் பெற்றோர் 24 மணி நேரம் கழித்து மருத்துவமனைக்கு வந்தனர். ஆனால் மிகவும் தாமதமாகியதால்விஜயாவின் உடல் துணியால் மூடப்பட்டு விட்டது. இதனால் அது விஜயா என்று தெரியாமல் ரமாபாயின்பெற்றோரிடம் பிணம் ஒப்படைக்கப்பட்டு அவர்களும் எடுத்துச் சென்று விட்டனர்.

இந்த நிலையில் விஜயாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் விஜயாவைப் பார்ப்பதற்காக வந்துள்ளனர். ஆனால்மருத்துவமனையில் விஜயா இல்லாததால் டாக்டர்களிடம் கேட்டுள்ளனர். அப்போதுதான் டாக்டர்களுக்குஉறைத்துள்ளது. பிணம் மாறிப் போய்விட்டதை அறிந்து விஜயா குடும்பத்தினர் பைத்தியம் பிடிக்காத குறையாகமனம் உடைந்தனர். விஜயாவின் உடலைக் கூட பார்க்க முடியாமல் போய் விட்டதே என்ற அதிர்ச்சியில்அங்கிருந்து அழுதுகொண்டே சென்றனர்.

இதற்கிடையே ரமா பாய் உயிருடன் இருக்கிறார் என்ற தகவலை சொல்லவும் மருத்துவமனை தாமதம் செய்துள்ளது.புதன்கிழமைதான் ரமாபாயின் வீட்டில் தகவல் சொல்லப்பட்டது. அவர்களுக்கு பெரும் குழப்பமாகி விட்டது.மருத்துவமனைக்கு வந்து பார்த்த பின்பே ரமா பாய் உயிருடன் இருக்கிறார் என்பதை அவர்கள் நிம்பினர்.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வரலாற்றில் இவ்வளவு பெரிய குழப்பம் இதுவரை ஏற்பட்டதில்லை என்றுகூறப்படுகிறது. இதுதொடர்பாக டாக்டர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+