திருப்பூரில் இன்று அனைத்துக் கட்சிகள் "பந்த்"
திருப்பூர்:
திருப்பூரில் "டிராபேக் சலுகை குறைப்பை எதிர்த்து இன்று பந்த் நடக்கிறது. இந்த "பந்த் காரணமாக ரூ. 50 கோடிரூபாய் அளவிற்கு உற்பத்தி பாதிக்கும்.
திருப்பூர் பனியன் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்பவர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை மத்திய அரசு வழங்கிவந்தது. இதன்படி, ஏற்றுமதி செய்வோருக்கு விதிக்கப்படும் வரியில், 15 சதவீத வரித் தொகையைத் திரும்பஅளித்து வந்தது. இதற்குப் பெயர் "டியூட்டி டிராபேக் ஆகும்.
இந்த "டியூட்டி டிராபேக்" சலுகையை அரசு திடீரென குறைத்தது. இது 15 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதம் முதல் 9சதவீதமாகக் குறைந்தது. இதனால், ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகினர். இந்த "டியூட்டி டிராபேக்"மட்டுமே லாபம் எனக் கருதிய ஏற்றுமதியாளர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது ஏற்றுமதியில் பெரும் நஷ்டம் ஏற்படுத்தும். இதனால், பனியன் ஏற்றுமதி குறைவதோடு, உற்பத்தியும்பாதிக்கும். அவ்வாறு உற்பத்தி பாதித்தால், தொழிலாளர்கள் பெருமளவில் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும்என அரசியல் கட்சியினரும் கருதினர்.
எனவே, அனைத்துக் கட்சிகளின் கூட்டம் திருப்பூரில் நடந்தது. இந்த "டிராபேக்" பிரச்னையை அரசின்கவனத்திற்குக் கொண்டு செல்ல "ஒரு நாள் பந்த்"தை திருப்பூரில் நடத்த இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, வியாழக்கிழமை திருப்பூரில் பந்த் நடத்தப்படுகிறது. இந்த பந்த்தில் அனைத்துக் கட்சிகளும்பங்கேற்கின்றன. இந்த பந்த் காரணமாக ரூ. 50 கோடி அளவிற்கு உற்பத்தி பாதிப்பு ஏற்படும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications