சந்திரிகா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
கொழும்பு:
இலங்கையில் அதிபர் சந்திரிகா அரசுக்கு எதிராக வெள்ளிக்கிழமை (ஜூன் 22) நம்பிக்கையில்லாத் தீர்மானம்கொண்டு வர எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
அதிபர் சந்திரிகாவின் மக்கள் கூட்டணியில் இடம்பெற்றிருந்த இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சி மக்கள்கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை செவ்வாய்க்கிழமை வாபஸ் பெற்றதையடுத்து சந்திரிகா அரசு தனதுமெஜாரிட்டியை இழந்துள்ளது.
மக்கள் கூட்டணியில் இடம்பெற்றிருந்த இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஹக்கீமை சந்திரிகா பதவிநீக்கம் செய்ததையடுத்து அவர்கள் கட்சி சந்திரிகா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதுநினைவிருக்கலாம்.
இந்த நிலையில் ஹக்கீம் தனது ஆதரவாளர்களான 6 எம்.பி.க்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியில் சேரலாம் என்றும்தெரிகிறது.
ஏனெனில் சந்திரிகா அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றவுள்ள ஐக்கிய தேசியக் கட்சி பிறஎதிர்க்கட்சிகளின் முழு ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறது.
இன்னொரு எதிர்க்கட்சியான ஜனதா விமுக்தி பெருமுனாவுக்கு 10 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள்நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டுப் போடுவார்களா அல்லது எதிர்ப்பார்களா என்பதுகேள்விக்குரியாகியுள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஜனதா விமுக்தி பெருமுனா கட்சி உறுப்பினர்கள்சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
மொத்த நாடாளுமன்ற எம்.பி.க்கள்: 225
எதிர்க்கட்சியினரின் பலம்:
ஐக்கிய தேசிய கட்சி: 88 (சபாநாயகர் தவிர)
ஜனதா விமுக்தி பெருமுனா: 10
இலங்கை முஸ்லீம் காங்கிரஸ்: 7
டி.யூ.எல்.எப்: 5
டெலோ: 3
ஏசிடிசி: 1
சிங்கள உருமாயா:1
மொத்தம்: 115
ஆளும் கட்சியின பலம்:
மக்கள் கூட்டணி: 100
என்.யூ.ஏ.: 4
ஈபிடிபி: 4
சுயேச்சை: 1
மொத்தம்: 109
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications