தாயை அடித்துக் கொன்ற மகன் கைது

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சேலத்தில் தாயை அடித்துக் கொன்றதாக மகன் மற்றும் மருமகளைப் போலீசார் கைது செய்தனர்.

சேலம் கருங்கல்பட்டி தெற்கு முனியப்பன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (60). இவரது கணவர்கோவிந்தராஜ். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இந்த நிலையில் ஜெயலட்சுமி தனதுமகன் நாகராஜூடன் வசித்து வந்தார். நாகராஜூவுக்கு சாந்தி என்ற மனைவி உண்டு.

நாகாராஜூவுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து சாந்தியைதுன்புறுத்தியுள்ளார். இதை அவரது தாயார் ஜெயலட்சுமி அடிக்கடி கண்டிப்பது உண்டு. இதனால் ஜெயலட்சுமிக்கும்அவரது மகன் நாகராஜூவுக்கும் இடையே சண்டை ஏற்படுவதுண்டு.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு ஜெயலட்சுமிக்கும் மகன் நாகராஜூவுக்கும் இடையே வழக்கம்போல்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாகாராஜ், தனது தாயாரை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்தஜெயலட்சுமியை அருகில் காலியாக இருந்த ஒரு பெட்டிக் கடைக்குள் வைத்துப் பூட்டியுள்ளார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து பெட்டிக்கடையைத் திறந்து பார்த்தபோது ஜெயலட்சுமி இறந்து போயிருந்தது தெரியவந்தது. பின்னர் ஜெயலட்சுமியின் உடலை மறைத்து வைத்திருந்து புதைக்க ஏற்பாடு செய்தார்.

இந்த நிலையில், ஜெயலட்சுமியைக் காணாத அக்கம் பக்கத்தினர் சந்தேகப்பட்டு தேடினர். அப்போது அவர்கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த நாகராஜைக் கைது செய்தனர். அவரது மனைவியும்,ஜெயலட்சுமியைக் கொலை செய்ய உடந்தையாக இருந்ததாக கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+