சிறுமுகையில் தேவாரம்..கடம்பூரில் விஜயகுமார்
கோவை:
வீரப்பனைத் தேடி இரு மாநில அதிரடிப்படைகளின் தலைவர் தேவாரம் சிறுமுகை காட்டுக்குள் நுழைந்தார்.ஐ.ஜி.,விஜயகுமார் கடம்பூர் காட்டுக்குள் சென்றார்.
அதிரடிப்படைகளின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தேவாரம், கோவை சிறுமுகை காட்டுக்குள் சென்றார்.இந்தப் பகுதியில் உள்ள லிங்காபுரம் காட்டுப் பகுதியில், வியாழக் கிழமை காலை 8 மணிக்கு நுழைந்தார். அவர்உழியூர் வனப் பகுதி வழியாக தனது தேடுதல் வேட்டையை மேற்கொண்டார்.
இந்த தேடுதல் வேட்டைக்கு உழியூரைச் சேர்ந்த ஒருவரை அதிரடிப்படையினர் அழைத்துச் சென்றனர். அவர்,காட்டுப் பகுதியை நன்கு அறிந்தவர் என்பதால், தேடுதல் வேட்டைக்கு உதவியாக அழைத்துச் சென்றனர்.
சுமார் 20 குடும்பங்களைக் கொண்ட உளியூர் கிராமத்தினர் கூலி வேலையை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.வீரப்பன் குறித்து தகவல் தெரிந்தால், அதிரடிப்படையினருக்கு உதவுவதாக அந்த கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.
சேலலையில் அதிரடிப்படையினர் முகாம்:
தற்போது சேலலை தேவிபாறை என்ற இடத்தில் அதிரடிப்படையினர் முகாமிட்டுள்ளனர். தேவையான உணவுப்பொருட்கள் அவர்களிடம் உள்ளதால், சிறிது நாட்கள் இங்கு தேடுதல் வேட்டை தொடரும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டி.எஸ்.பி.,யாக இருந்த சண்முகநாதன், சிறுமுகையில் உள்ள அவரதுபண்ணை வீட்டில் இருந்தபோது கடத்திச் செல்லப்பட்டார்.
அப்போது, அவரை மீட்கும் பணியில் தேவாரம் ஈடுபட்டார். தற்போது அதே பகுதியிலிருந்து தேவாரம் தனதுவேட்டையைத் துவக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications