6 மாதங்களில் வீரப்பனை பிடிப்போம்: தேவாரம்
மேட்டுப்பாளையம்:
மலை வாழ் மக்களின் உதவியுடன் வீரப்பனை விரைவில் பிடிப்போம் என்று இரு மாநில கூட்டு அதிரடிப்படை தலைவர் தேவாரம்தெரிவித்தார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்காக தமிழக-கர்நாடக அதிரடிப்படை வீரர்கள் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
சிறுமுகை காட்டுக்குள் தேவாரம் அதிரடிப்படை வீரர்களுடன் நுழைந்தார். சிறுமுகை காட்டுக்குள் சென்ற தேவாரம் உப்புப்பள்ளம்என்ற பகுதியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
வீரப்பனைப் பிடிப்பதில் தமிழக அரசு மிகவும் உறுதியாக உள்ளது. இதற்காக அதிரடிப்படைக்கு நவீன ரக ஆயுதங்கள் முதல்அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
வீரப்பன் நடமாட்டம் அதிகமாக உள்ள வனப்பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆதிவாசிகளை சந்தித்து அவர்களிடம்தகவல்களைப் பெறத் திட்டமிட்டுள்ளோம். எங்களது தேடுதல் வேட்டையில் கிராம மக்களுக்கு எவ்வித இடையூறுகளும்இருக்காது.
சேலம், கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வீரப்பன் நடமாட்டம் அதிகமாக உள்ள கிராம மக்களிடம் விசாரணைநடத்தவுள்ளோம்.
இதே போல் மைசூர், சாம்ராஜ் ஆகிய பகுதிகளில் உள்ள கிராம மக்களையும் சந்திக்க உள்ளோம். இதுவரை உளியூர், ஆருர், கீழ்பெரியூர், உப்புப்பள்ளம் ஆகிய கிராமங்களில் உள்ள மக்களை சந்தித்து வந்துள்ளோம்.
எங்கள் தேடுதல் வேட்டையின்போது மனித உரிமை மீறல்கள் எதுவும் இல்லை.
பரிசு அறிவிப்பு:
வீரப்பன் பற்றி தகவல் கொடுப்போருக்கு ரூ 25 லட்சம், வீரப்பனது கூட்டாளி சேத்துக்குளி கோவிந்தன் பற்றி தகவல்சொல்பவர்களுக்கு ரூ 15 லட்சம், பிற கூட்டாளிகள் பற்றி தகவல் கொடுப்போருக்கு ரூ 10 லட்சம் என்று தமிழக-கர்நாடக படைகள்பரிசுத் தொகைகள் அறிவித்துள்ளன.
அதிரடிப்படையில் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் இளம் வீரர்கள் சேர்ந்துள்ளனர்.
கிராமங்கள் தத்தெடுப்பு:
வீரப்பன் பற்றி ஒருவர் தகவல் கொடுத்தால் அவருக்கு ரூ 1 லட்சம் அளிக்கப்படும். ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தகவல்கொடுத்தால் பணம் கிராம மக்கள் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.
அந்த கிராமத்தை அரசு தத்தெடுத்துக் கொள்ளும். அந்த கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர்வசதி உள்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.
வீரப்பன் நடமாட்டம் உள்ள வனப்பகுதிகளில் தேடுதல் வேட்டையை முடித்துக் கொண்டு 25 ம் தேதிக்குள் வந்து விடுவோம்.அதிரடிப்படை வீரர்கள் அனைவரும் வெளியே வர மாட்டார்கள். பாதிக்கும் மேற்பட்ட அதிரடிப்படை வீரர்கள் மாறுவேடத்தில்காட்டுக்குள் ரோந்துப்பணியில் ஈடுபடுவர்.
வீரப்பனைப் பிடிக்கும் வரை சத்தியமங்கலம் காட்டிலிருந்து சென்னைக்கு வந்து போய்க் கொண்டிருப்போம். வீரப்பனை ஒருஆண்டுக்குள் பிடிக்க வேண்டும் என்று அரசு கால அவகாசம் அளித்துள்ளது.
அரசின் உறுதி, கிராம மக்களின் ஒத்துழைப்பு மற்றும் அதிரடிப்படையினரின் கடும் உழைப்புடன் வீரப்பனை நாங்கள் பிடித்தேதீருவோம்.
6 மாதங்களில் வீரப்பனைப் பிடிப்போம் என்று உறுதி கொண்டுள்ளோம் என்று தமிழக-கர்நாடக கூட்டு அதிரடிப்படை தலைவர்தேவாரம் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications