பலியானோர் எண்ணிக்கை 57 ஆக உயர்வு
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கடலுண்டி ஆற்றில் ரயில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சாவு எண்ணிக்கை 100 ஐத்தாண்டும் என்று தெரிய வந்துள்ளது.
தடம் புரண்ட 6 பெட்டிகளில் 500 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களில் வெள்ளிக்கிழமைஇரவு 9 மணி வரை 100 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர்.
ரயில்வே அமைச்சர் விரைந்தார்:
விபத்து குறித்துத் தெரிந்து கொண்டதும் மத்திய ரயில்வே அமைச்சர் நிதீஷ் குமாரும், ரயில்வே வாரியத் தலைவரும் சம்பவஇடத்திற்கு விரைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மங்களூரிலிருந்து சென்னைக்கு:
முன்னதாக, மங்களூரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த சென்னை மெயில் (ரயில் எண் 6602) வெள்ளிக்கிழமை மாலைகோழிக்கோட்டுக்கு வரும் வழியில் அங்குள்ள கடலுண்டி ஆற்றுக்குள் கவிழ்ந்து விழுந்தது.
பயணிகள் சுதாகரிப்பதற்குள் ஆறு பெட்டிகள் திடீரென்று தடம்புரண்டு ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
மூழ்கிய பெட்டிகளில் ஒன்றில் முழுவதும் பெண்கள் மட்டுமே இருந்தனர். மற்ற இரண்டு பெட்டிகளும் முன்பதிவு செய்யாதவைஎன்பதால் அதில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது.
சேறு நிறைந்த ஆற்றுக்குள் மூழ்கிய பெட்டிகளில் அகப்பட்டுக் கொண்ட பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் வெளியேவரமுடியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இந்தக் கோர விபத்தில் 100 க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என்றுகருதப்படுகிறது. அது மேலும் உயரலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இதுவரை 57 க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்களில் 34 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி, பரப்பனங்காடி, திரூர், மலப்புரம் மற்றும் பலபகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மீட்புப்பணிகள் தீவிரம்:
விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த பயணிகளை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தீயணைப்புப்படையினரும், போலீஸாரும் முதற்கட்ட மீட்புப்பணியில் ஈடுபட்டனர். கொச்சி கடற்படை மையத்தில் இருந்தும்மீட்புப்படை வரவழைக்கப்படவுள்ளது.
கேரள முதல்வர் விரைந்தார்:
இந்தக் கோர ரயில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கேரள முதல்வர் அந்தோணி, அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.
கோழிக்கோடு, மலப்புரம் மாவட்ட நிர்வாகத்தினர் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணியில் செயல்பட வேண்டுமெனமுதல்வர் அந்தோணி உத்தரவிட்டுள்ளார்.
திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் செயலகத்தில் தனி அவசர கண்காணிப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ரயில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு:
இந்தக் கோர விபத்தால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. சம்பவ இடத்தில் தொடர்ந்து மழை பெய்வதால்மீட்புப்பணியும் முழுவீச்சில் நடைபெற முடியாமல், பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. முதற்கட்ட தகவல்படி, ரயில்வே பாலம்உடைந்ததால்தான் விபத்து ஏற்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications