திருமாவளவனை விடுவிக்க கருணாநிதி கோரிக்கை
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் அமைப்பு நிறுவனரும், தலைவருமான திருமாவளவனையும், அவரது கட்சி உறுப்பினர்களையும்போலீசார் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து சென்னையில், வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மாநில பொருளாளர் முடக்கத்தான் பாண்டியன் படுகொலை செய்யப்பட்டது பற்றி சி.பி.ஐ.விசாரணை செய்யப்பட வேணடும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஒரு நாள் அடையாளஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் அமைப்பாளர் திருமாவளவன் அறிவித்திருந்தார்.
தங்கள் கோரிக்கையை வலியுறுத்துவதும், தங்கள் உணர்வுகளை தெரிவிக்கவும் அற வழியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதும்ஜனநாயக நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வழிமுறைகள்தன்.
போலீசார் அனுமதி மறத்திருந்தாலும் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து மாலையில் விடுதலை செய்வதுதான் வழக்கம்.இதுதான் மரபு.
ஆனால் எந்த குற்றமும் செய்யாத விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பாளர் திருமாவளவனையும் அவரது கட்சி உறுப்பினர்களையும்போலீசார் வியாழக்கிழமை மாலை கைது செய்தனர். நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்துள்ளனர்.
அறவழியில் ஆர்ப்பாட்டம் நடக்கும் என அறிவித்திருப்பதால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு போலீசார் அனுமதி அளித்திருக்கலாம்.
ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதித்தது மட்டுமில்லாமல் திருமாவளவனையும் கைது செய்தது கண்டனத்திற்குரியது. சட்டம் ஒழூங்கைகாப்பாற்ற வேண்டிய போலீசாரே சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார்கள்.
போலீசார் திருமாவளவனையும், அவரது கட்சி உற்பினர்களையும் விடுவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications