புதுவையில் விடுதலைச் சிறுத்தைகள் நாளை "பந்த்"
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் திங்கள்கிழமை "பந்த்" நடைபெறும் என்று, பாண்டிச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர்அறிவித்துள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவனை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிஅவர்கள் இந்த "பந்த்"திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தமிழகப் பொருளாளர் முடக்கத்தான் பாண்டி, கடந்த ஜூன் 19ம் தேதி கொலைசெய்யப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் வெள்ளிக்கிழமை "பந்த்" நடந்தது. இதற்கான முன்னெச்சரிக்கைநடவடிக்கையாக, திருமாவளவன் உள்பட பலரும் வியாழக்கிழமையன்றே கைது செய்யப்பட்டனர்.
மேலும், வெள்ளிக்கிழமை நடந்த "பந்த்"தின் போது, பஸ்களை உடைத்துச் சேதப்படுத்தியதற்காக, தமிழகம் முழுவதும்இந்த அமைப்பைச் சேர்ந்த சுமார் 1,500 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், திருமாவளவனை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், பாண்டி கொலை பற்றி சி.பி.ஐ.விசாரணைக்குத் தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று கோரியும், பாண்டிச்சேரியைச் சேர்ந்த இவ்வமைப்பினர்வரும் திங்கள்கிழமை, பாண்டிச்சேரியில் ஒருநாள் "பந்த்"துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications