பயணிகளின் பாராட்டு மழையில் உள்ளூர் மக்கள்
சென்னை:
ரயில் விபத்து நடந்த இடத்தைச் சேர்ந்த உள்ளூர் மக்களின் உதவியால், மீட்புப் பணிகள் எளிதாக நடந்தன என்றுவிபத்திலிருந்து தப்பிய பயணிகள் பாராட்டினர்.
60 பேரைப் பலிகொண்ட ரயில் விபத்தில் தப்பித்த பயணிகள் சிலர் சென்னைக்கு வந்தனர். சென்னை சென்ட்ரல்ரயில் நிலையத்தில் வந்திறங்கிய இப்பயணிகள் பலரும் உருக்கமான பேட்டியளித்தனர்.
ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி.யான வி.ஆர். லட்சுமி நாராயணனும் இந்த விபத்திலிருந்து தப்பித்தார். அவர்கூறியபோது:
கடலுண்டி ஆற்றுப் பாலத்தில் ரயில் வந்தபோது, திடீரென்று குலுக்கல் ஏற்பட்டது. யாரோ சங்கிலியைப் பிடித்துஇழுத்து விட்டதாக நினைத்தோம். அதன்பிறகு, பெரும் கூச்சலாகக் கேட்டது.
கடைசிப் பெட்டியில் தீப்பிடித்துள்ளது போலத் தெரிகிறது என்றுதான் ரயிலில் இருந்த அலுவலர்கள் கூறினர்.ஆனால், ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது அதற்கு அப்புறம்தான் தெரிந்தது என்று அவர் கூறினார்.
இந்த விபத்தில் உள்ளூர் பொதுமக்களும், ரயில்வே துறையினரும் மீட்புப் பணிகளைச் சிறப்பாகச் செய்தனர்.தங்களால் முடிந்தவரை உணவு, மருத்துவ வசதிகளை அளித்ததோடு, தகவல் தொடர்பு வசதிகளையும் ரயில்பயணிகளுக்குச் செய்தனர் என்று கூறினார் கோழிக்கோட்டைச் சேர்ந்த அலெக்ஸாண்டர்.
விபத்தில் தப்பிய 5 வயது சிறுமி அனதா தன்னுடைய மழலை மொழியில் கூறியதாவது:
ரயிலில் ஏறியதிலிருந்தே நானும் என் தங்கையும் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தோம். ஆற்றுப் பாலத்தில்ரயில் போகும்போதுதான், சர்க்கஸ் மாதிரி ரயில் குலுங்கியது. அதற்கேற்ப நாங்களும் குதித்து விளையாடினோம்.திடீரென்று ரயில் பலத்த சத்தத்துடன் நின்றுவிட்டது.
பாலத்தில் ஒரு மாடு வருவதை நாங்கள் பார்த்தோம். அந்த மாடுதான் ரயிலில் மோதிவிட்டது என்று நினைத்தோம்.ஆனால், ரயில் தீப்பிடித்துவிட்டது என்று சொன்னார்கள். நாங்கள் பயந்து அம்மாவிடம் போய் உட்கார்ந்துகொண்டோம். தாத்தாதான் கீழே இறங்கிப் பார்த்துவிட்டு, ரயில் கவிழ்ந்து விட்டது என்று சொன்னார். எங்களுக்குமிகவும் பயமாக இருந்தது என்று கூறினார் சிறுமி அனதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications