பெரு நாட்டில் பூகம்பம்: 100 பேர் சாவு
அரகுஸ்பா (பெரு):
பெரு நாட்டில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் 100 பேர் பலியாகி விட்டனர். 500 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டின் தென் பகுதியில் ஏற்பட்ட இந்தப் பூகம்பம், ரிச்டர் அளவுகோலில் 7.9என்று பதிவாகி இருந்தது. இந்தப் பூகம்பம் 1 நிமிடத்திற்கும் மேல் நீடித்தது என்று கூறப்படுகிறது.
இந்நாட்டிலுள்ள அரகுஸ்பா நகரில் ஏராளமான வீடுகளும், புராதன கட்டடங்களும் இடிந்து தரைமட்டம் ஆகின.இங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சர்ச்சும் இந்தப் பூகம்பத்தில் இடிந்து விழுந்தது.
இடிபாடுகளுக்கிடையே இன்னும் அதிகமான மக்கள் சிக்கியிருப்பார்கள் என்று கூறப்படுவதால், பலியானவர்களின்எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று கூறப்படுகிறது.
மீட்புப் பணி நடவடிக்கைகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. 22 டன் எடையுள்ள உணவு, மருந்து,போர்வைகள் உடனடியாக விமானங்கள் மூலம் பூகம்பம் நடந்த இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.
பெரு நாட்டு அதிபரும் உடனடியாக பூகம்பம் நடந்த நகருக்கு விரைந்துள்ளார்.
இந்நாட்டிற்கு அருகில் உள்ள சிலி மற்றும் பொலிவியா நாடுகளிலும் லேசான பூகம்பம் ஏற்பட்டதாகத் தகவல்கள்தெரிவிக்கின்றன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications