புழுத்த அரிசியைக் கேரளாவுக்கு விற்க முயற்சி?
சென்னை:
புழுத்துப் போன அரிசியைக் கேரளாவிற்கு விற்க முயற்சிப்பதாக முதல்வர் ஜெயலலிதா மீது முன்னாள் முதல்வரும்திமுக தலைவருமான கருணாநிதி புகார் கூறியுள்ளார்.
திமுக ஆட்சியில் ரேஷனில் அளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது புழுத்த அரிசி என்று முதல்வர் ஜெயலலிதா புகார்கூறியிருந்தார். ஆனால் இப்புகாரை கருணாநிதி மறுப்பு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், புழுத்துப் போன அரிசி என்றால், அந்த அரிசியைக் கேரளாவிற்கு விற்பதற்கு ஏன் தற்போதுமுயற்சித்து வருகிறார்கள் என்று கருணாநிதி கேட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ஜெயலலிதாவால்அண்மையில் நியமிக்கப்பட்டவர் வி. குணாளன்.
இவர் கேரள அரசுக்கு 12.6.2001 அன்று எழுதிய கடிதத்தில், "தமிழகத்தில் போதுமான அளவு அரிசி உள்ளது. இதுதரமானதாகவும் உள்ளது. சிகப்புக் கலர் கொண்ட அரிசியைக் கேரள மக்கள் விரும்புவார்கள் என்பதால், இந்தஅரிசியைக் கேரள நுகர்வோர் வாணிபக் கழகத்திற்கு விற்கலாம் என்று நினைக்கிறோம். அரிசி வாங்குவதற்கானமற்ற விவரங்களைப் பேச உங்கள் அதிகாரிகளை அனுப்பி வையுங்கள்" என்று எழுதியுள்ளார்.
புழுத்த அரிசி என்று சொன்ன ஜெயலலிதா, தரமான அரிசி என்று கேரளாவிற்கு விற்க முயற்சிக்கிறார்.இதிலிருந்தே அவர் திமுக ஆட்சியைப் பற்றிக் கூறிய புகார் எல்லாம் பொய் என்று தெரிய வருகிறது.
மக்களை முட்டாள்களாக்குவதற்காகத்தான், அரிசி கொள்முதலில் ஊழல் என்றும், புழு பூச்சிகள் நிறைந்த புழுத்தஅரிசி என்றும் முழங்குகிறார் ஜெயலலிதா. இது என்ன நியாயம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications