வீரப்பன்: நாளை அதிரடிப்படையின் ஆலோசனைக் கூட்டம்
சத்தியமங்கலம்:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்காகக் காட்டுக்குள் புகுந்துள்ள கூட்டு அதிரடிப்படையினர், திங்கள்கிழமைகூடி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர்.
வீரப்பனைப் பிடிப்பதற்காக, கடந்த ஜூன் 21ம் தேதி தமிழக-கர்நாடக அதிரடிப் படையினர் காட்டுக்குள் புகுந்தனர்.தமிழக அதிரடிப்படைக்குத் தேவாரம் தலைமை தாங்கி, சத்தியமங்கலம் காட்டுப் பகுதிக்குள் நுழைந்துள்ளார்.
கெம்பையா, கர்நாடக அதிரடிப்படையினருக்குத் தலைமை தாங்கி காட்டுக்குள் வீரப்பன் வேட்டையில்ஈடுபட்டுள்ளார்.
காட்டுக்குள் நுழைந்து, 4 நாட்கள் ஆகிவிட்ட போதும், தேடுதல் வேட்டையில் முன்னேற்றம் எதுவும்காணப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், 2 மாநில அதிரடிப்படை வீரர்களும் திங்கள்கிழமை கூடி, முக்கியமான ஆலோசனையில் ஈடுபடப்போவதாகக் காட்டிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. வீரப்பனைப் பிடிப்பதற்கான அடுத்தகட்டநடவடிக்கையாக இந்தக் கூட்டம் நடக்கவுள்ளது.
ஆனால், கூட்டம் எங்கு நடக்கும் என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை. இருந்தாலும், மலைப் பகுதிகளிலேயேஎங்காவது ஒரு இடத்தில், அதிரடிப்படையினரின் இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்கும் என்று தெரிகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications