அதிமுக, திமுக எங்களுக்கு எதிரிகள் அல்ல: வைகோ
ஈரோடு:
அதிமுகவும், திமுகவும் எங்களுக்குப் பகையாளிகள் அல்ல என மதிமுக பொதுச் செயலர் வைகோ பேசினார்.
ஈரோட்டில் நடந்த மாவடட் மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வைகோ பேசியதாவது:
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் இரண்டு வலுவான சக்திகளை எதிர்த்து நின்று பெரும் தோல்வியை நாம்தழுவினாலும், பீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்கிறோம். இது இந்த இயக்கத்தின் வெற்றி.
திட்டமிட்டு வெளியேற்றப்பட்ட, 15 தினங்களில் தேர்தலைச் சந்தித்தோம். 30 இடங்களில் கூட போட்டியிடதகுதியற்ற கட்சி என திமுக கருதி உதாசீனப்படுத்தினாலும், பல தொகுதிகளில் 15 ஆயிரம் ஓட்டுக்களுக்கும் மேல்பெற்று எங்கள் பலத்தை நிரூபித்துள்ளோம்.
திராவிடக் கொள்கை தமிழகத்தில் மங்கிப் போய் விட்டது. இந்தக் கொள்கையின்படி நடக்கும் மதிமுக, அதை சுடர்விட்டு பிரகாசிக்கச் செய்யும். திமுகவை ஒரு பகையாளியாக மதிமுக என்றும் நினைக்கவில்லை, அதிமுகவும்எங்களுக்கு எதிரி அல்ல. மதிமுக தனது பணியைத் திட்டமிட்டு செய்து வருகிறது. மக்கள் நம்பிக்கையைப் பெறும்முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்வோம் என்றார் வைகோ.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications