மதங்களை வென்ற பூரி ஜெகன்நாதர்
புவனேஸ்வர்:
இந்து முஸ்லிம் ஒற்றுமையை புலப்படுத்தும் விதமாக ஒரிசாவில் இருக்கும் ஏராளமான முஸ்லிம்கள் அங்கு மிக விமரிசையாககொண்டாடப்படும் பூரி ஜெகன்நாதர் ஆலய தேரோட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஒரிசாவில் அமைந்துள்ளது புகழ் பெற்ற பூரி ஜெகன்நாதர் கோவில். இந்த கோவிலில் ஆண்டு தோறும் தேர் திருவிழா மிகவிமரிசையாக 9 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு திருவிழா சனிக்கிழமை துவங்கியது. இந்துக்களை போலவே முஸ்லிம்களும் தேர் திருவிழாவில் கலந்து கொண்டுதேர் இழுத்தது, இந்து முஸ்லிம் ஒற்றுமையை புலப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.
பூரி ஜெகன்நாதர் கோவிலின் தேர் திருவிழாவில் ஏறக்குறைய 7,00,000 பேர் பங்கு கொண்டு கோவிலின் மிகப் பெரிய தேரை பூரிநகரின் வீதிகளில் இழுத்து வந்தனர். சிறு தேர்களும் நகரின் வீதிகளில் பக்தர்களால் இழுத்து வரப்பட்டது.
இது குறித்து முகமது ஜாமியுல்லா என்பவர் கூறுகையில், நாங்கள் கடந்த 100 ஆண்டுகளாக இந்து பண்டிகைகளைக் கொண்டாடிவருகிறோம். இந்துக்களும் எங்கள் பண்டிகைகளில் பங்கு பெறுவார்கள்என்றார்.
இங்கு இந்துக்களும், முஸ்லிம்களும் சாதி, மத வேற்றுமைகளை மறந்து ஒருவர் மற்றவர் பண்டிகைகளுக்கு தாராளமாக நிதிவழங்குகிறார்கள் என கூறும் ஜாமியுல்லா ஜெகன்நாத சுவாமியின் பெருமைகள் குறித்து புத்தகம் ஒன்றும் எழுதி வருகிறார்.
பூரிக்கு 145 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தோலசாஹி கிராமத்திலிருந்தும் ஏராளமான முஸ்லிம்கள் தேர்த்திருவிழாவில்பங்கேற்க பூரி நகருக்கு வருகை தருகின்றனர்.
விழா கமிட்டியின் உறுப்பினரான கராமட் அலி என்பவர் கூறுகையில், விழாவிற்கான நிதி வசூலை முஸ்லிம்களிடமிருந்து பெற்றுக்கொள்கிறோம். தேரில் செய்யப்பட வேண்டிய தச்சு வேலை பணிகளுக்கும் நாங்கள் முஸ்லிம்களை நியமிக்கிறோம் என்றார்.
இது குறித்து பூரியிலிருக்கும் ஒரு அரசியில் கட்சி தலைவர் கூறுகையில், கடவுள் என்பது ஒன்றுதான். அவரவர்கள்மதத்திற்கேற்றவாறு பெயர்கள் மட்டும்தான் மாறும். கடவுள் ஒன்றுதான் என்றார்.
ஒரிசாவில் இருக்கும் முஸ்லிம்கள் இந்து பண்டிகைகளை கொண்டாடுவதில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். முஸ்லிம் பெண்கள்இந்து கடவுள்களின் அருளை பெறுவதற்காக இந்து மத சடங்குகளை பின்பற்றுகின்றனர்.
கிறிஸ்தவர்களும் ஜெகன்நாதர் கோவிலின் தேர்த்திருவிழாவில் பங்கேற்று தேர் இழுக்கிறார்கள். முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும்தேர் வடம் பிடித்து தேர் இழுக்க அனுமதிக்கப்பட்டாலும் இந்துக்களை தவிர வேறு யாரும் கோவிலுக்குள்அனுமதிக்கப்படுவதில்லை என்பது வருத்தத்க்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications