சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதி
Subscribe to Oneindia Tamil
செென்னை:
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக புரபல்ல குமார் மிஸ்ரா திங்கள்கிழமை காலை பதவியேற்றார்.
ஒரிஸ்ஸா உயர் நீதிமன்றத்தில் இருந்து சென்னைக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார் மிஸ்ரா.
நீதிமன்ற வளாகத்தில் நடந்த ஒரு எளிய நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.கே. ஜெயின் இவருக்குப்பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் சார்பாக வழக்கறிஞர் என்.கே. சந்திரன் புதிய நீதிபதியைவரவேற்றார்.
மிஸ்ராவுடன் சேர்த்து தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது.இன்னும் 5 இடங்கள் காலியாக உள்ளன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications