இப்படியும் ஒரு கல்யாணம்!
பழனி:
கணவன் உயிருடன் இருக்கும் போதே, தன் காதலனைத் திருமணம் செய்து கொண்டார் ஒரு பெண்.
இந்தக் கல்யாணத்துக்கு அந்தப் பெண்ணுடைய பெற்றோரும், உற்றாரும், உறவினர்களும் வந்திருந்து வாழ்த்தினர்.
பழனி வாய்க்கால்பாலத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் ஒரு முறுக்கு வியாபாரி. இவருடைய மனைவி ஈஸ்வரி. இவர்களுக்குத்திருமணமாகி ஓராண்டுகூட ஆகவில்லை.
திருமணமான அடுத்த மாதமே ஈஸ்வரி கர்ப்பமானார். இதனால், ஏழாவது மாதம் அவருக்கு வளைகாப்பு நடந்து,மதுரை-திருமங்கலம் அருகே கரடிக்கல்லில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றார்.
அப்போதுதான், பக்கத்து கிராமமான சொறிக்கான்பட்டியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் ஈஸ்வரிக்குப் பழக்கமானார்.இவரைக் கண்டதும் காதல் கொண்டார் ஈஸ்வரி.
அடுத்த 3 மாதத்தில் ஈஸ்வரிக்குக் குழந்தை பிறந்தது. ஆனால் இறந்தே பிறந்தது. இதைக் கேள்விப்பட்ட குமார், "பரவாயில்லை,போகட்டும். உடம்பை நன்றாகப் பார்த்துக் கொள். அப்புறமாக வந்து உன்னைக் கூட்டிச் செல்கிறேன்" என்று கூறிவிட்டுச் சென்றார்.
இந்நிலையில், காதலன் அண்ணாதுரையைத் திருமணம் செய்ய முடிவெடுத்தார் ஈஸ்வரி. இதற்கு, அவருடைய பெற்றோர்களும்சம்மதித்து விட்டனர். இதைத் தொடர்ந்து, அண்ணாதுரை-ஈஸ்வரி திருமணமும் நடந்துவிட்டது.
தன் மனைவிக்குக் "கல்யாணம்" முடிந்துவிட்டது என்பதைக் கேள்விப்பட்டு, ஓடி வந்தார் குமார். ஆனால் ஈஸ்வரி அவரிடம்எதுவும் பேசாமல், குமார் கட்டிய தாலியை மட்டும் திருப்பிக் கொடுத்து விட்டார்.
குமாருக்கு ஆதரவாக போலீஸாரும் பஞ்சாயத்தாரும் கூடிப் பேசிப் பார்த்தார்கள். ஆனால், எந்தவிதப் பலனும் இல்லை.
"தாலி மட்டுமா கொடுத்தேன். எங்கே என் பணமும் நகைகளும்?" என்று கண்ணீருடன் கேட்டார் குமார். ஈஸ்வரியின் குடும்பம்கஷ்டப்பட்ட போது, அவர்களுக்குக் குமார் கொடுத்த ரூ.5,000 மற்றும், 3 பவுன் தங்க செயினை அவர்கள் வேறு வழியில்லாதுதிருப்பிக் கொடுத்தனர்.
இது போக, "இனி உனக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை" என்றும் ஈஸ்வரியிடம் இருந்து எழுதி வாங்கிக் கொண்டார் குமார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications