அமெரிக்காவில் சோனியா
நியுயார்க்:
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சோனியா காந்தி ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாகஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா வந்து சேர்ந்தார்.
வாஷிங்டனில் அவர் பல உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு ஐஸ்லேண்ட் வந்த சோனியா காந்தி, அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார்.
சோனியா காந்தியுடன் முன்னாள் நிதியமைச்சர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை முன்னாள் இணையமைச்சர் நட்வார் சிங்,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முரளி தியோரா மற்றும் தொழிலதிபர் ஆர்.பி.கோயங்கா ஆகியோர் சென்றுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை சோனியா காந்தி அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மற்றும் வெளியுறவுத்துறை கவுன்சில் உறுப்பினர்கள்மத்தியில் உரையாற்றுகிறார். அதே நாள் அமெரிக்க முன்னாள் இணை செயலர் ஹென்றி கிஸிங்கரை சந்தித்துப் பேசுகிறார்.
செவ்வாய்க்கிழமை மாலை ஷெராட்டன் ஹோட்டலில் சோனியா காந்திக்கு அமெரிக்காவில் உள்ள காங்கிரஸார் சார்பில்வரவேற்பு அளிக்கப்படுகிறது.
நியுயார்க்கில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் சோனியா காந்தி, அங்கு நடக்கவுள்ள ஐ.நா.சபை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.ஜூன் 27 ம் தேதி வாஷிங்டன் செல்வதற்கு முன் சோனியா காந்தி ஐ.நா.சபை பொதுச் செயலாளர் கோபி அன்னனை சந்தித்துப்பேசுகிறார்.
ஜூன் 27 ம் தேதி சோனியா காந்தி வாஷிங்டனில் உள்ள இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.
சோனியா காந்தி தனது அமெரிக்க பயணத்தின் போது, மிக முக்கியமான தலைவர்களை சந்தித்துப் பேசுவார் என்றுவெளியுறவுத்துறை முன்னாள் இணையமைச்சர் நட்வார் சிங் தெரிவித்தார். இருப்பினும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூபுஷ்ஷை சந்தித்துப் பேசுவாரா என்பது குறித்து அவர் எதுவும் கூறவில்லை.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை சந்திக்கும் வகையிலும், காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியத் தன்மையை அவர்களுக்குதெரியப்படுத்தும் வகையிலும் அவர் தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.
கடந்த 1993 ம் ஆண்டு சோனியா காந்தி, மறைந்த ராஜீவ் காந்தி அறக்கட்டளை நடத்திய கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகசோனியா காந்தி நியுயார்க் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications