இங்கிலாந்தில் ஆசியர்கள் மீது தாக்குதல்
லண்டன்:
இங்கிலாந்தில் உள்ள பர்ன்லே டவுனில் வசித்து வந்த ஆசியாவைச் சேர்ந்த டாக்சி டிரைவர் அடையாளம் தெரியாத கும்பலால்தாக்கப்பட்டதையடுத்து அங்கு இனக்கலவரம் மூண்டது.
பத்திரிக்கை ஏஜன்ட் அலுவலகம், மதுக்கடைகள், விபச்சார விடுதி ஆகிய இடங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. ஒரு காரும்தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.
சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் தொடர்ந்து வன்முறை நடந்து வருவதால் பர்ன்லே டவுன் முழுவதும் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த சனிக்கிழமை ஆசியாவைச் சேர்ந்த டாக்ஸி டிரைவரை வெள்ளையர்கள் சிலர் ஒரு கும்பலாக வந்து தாக்குதல்நடத்தினர்.
இந்த வருடத்தில் நடந்த இனக்கலவரங்களில் இது நான்காவது இனக்கலவரமாகும் இது. இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில்உள்ள பல தொழில் நகரங்களில் அடிக்கடி வெள்ளையர்களுக்கும், ஆசியாவைச் சேர்ந்தவர்களுக்கும் அடிக்கடி கலவரம் ஏற்படும்.
கடந்த மாதம் ஓல்டுஹாம் பகுதியில் கர்ப்பிணிப்பெண் ஒரு கும்பலால் தாக்கப்பட்டதையடுத்து இங்கிலாந்தில் வசிக்கும் 500 க்கும்மேற்பட்ட பாகிஸ்தானியர்கள், போலீஸாருடன் சண்டையிட்டனர்.
இங்கிலாந்தில் உள்ள வலது சாரி வெள்ளை இன தீவிரவாதிகள்தான் இந்தக் கலவரத்தைத் தூண்டி விடுகின்றனர் என்று போலீஸார்குற்றம்சாட்டினர்.
பலமுறை லீட்ஸ் மற்றும் பிராட்போர்ட் நகரங்களில் வசிக்கும் வெள்ளை இனத்தவர்களுக்கும் ஆசியாவைச் சேர்ந்தவர்களுக்கும்பெரிய அளவில் கலவரம் ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பர்னேவில் கடந்த சனிக்கிழமை ஆசியாவைச் சேர்ந்த டாக்ஸி டிரைவர் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து மிகவும் தாமதமாகவேபோலீஸார் அப்பகுதிக்கு வந்தனர்.
போலீஸாரின் தாமதத்தால் அங்கு வன்முறை பெரிய அளவில் வெடித்து விட்டது. இதனால்தான் அப்பகுதியில் வசிக்கும்ஆசியர்கள் ஒன்றிணைந்து போலீஸார் மேல் கல்வீச்சு நடத்தினர்.
கலவரம் சுமார் இரண்டு மணி நேரம் அப்பகுதியில் இருந்த பல மதுக்கடைகள் அடித்து உடைக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமையும்வன்முறை தொடர்ந்தது. கலவரம் நடந்த இடத்தில் ஹெலிகாப்டரில் போலீஸார் ரோந்து சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.
சம்பவம் நடந்த இடத்தில் உள்ள மசூதியில் வெள்ளையர்கள் ஊர்வலம் நடத்தினர். அந்தப் பகுதியில் ஆசியர்கள் பலர் கல்வீசித்தாக்குதல் நடத்தினர்.
பாட்டில்களையும் வீசித் தாக்குதல் நடத்தினர். அப்போது மீண்டும் கலவரம் மூளும் அபாயம் ஏற்பட்டதால் அங்கு போலீஸார்ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அந்த நேரம் வெள்ளையர்களுக்கும், ஆசியர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் சிலபோலீஸார்களுக்கு காயம் ஏற்பட்டது.
இனக்கலவரத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications