நீதிமன்றத்தில் வடை, டீ கேட்டு தகராறு செய்த கைதிகள்

Subscribe to Oneindia Tamil

கோவை:

நீதிமன்றத்தில் வடை, டீ கேட்டு கைதிகள் தகராறு செய்தனர். இதனால் கோவை நீதிமன்ற வளாகத்தில் பரபரபரப்புஏற்பட்டது.

கோவை மத்திய சிறையில் அல் உம்மா மற்றும் இந்து இயக்கங்களைச் சேர்ந்த பலர் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் மீதான வழக்கு கோவை நீதிமன்றங்களில் நடந்து வருகிறது. கடந்த காலத்தில் நடந்த பல்வேறுவழக்குகளில் இவர்கள் சிறையில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை நீதிமன்றத்திற்கு இவர்கள் அனைவரும் வேனில் அழைத்து வரப்பட்டனர்.

இந்து இயக்கங்களைச் சேர்ந்த 21 கைதிகள் ஒரு வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

அப்போது அவர்கள் நீதிபதியிடம், தங்களுக்கு போலீசார் தண்ணீர் கூட தர மறுக்கின்றனர் எனப் புகார் கூறினர்.இதையடுத்து, மீண்டும் இந்தக் கைதிகளை போலீஸார் வேனில் அழைத்துச் சென்றனர்.

அப்போது, கைதிகள் அனைவருக்கும் போலீஸார் டீ வாங்கிக் கொடுத்தனர். அவர்களுக்கு டீயுடன் ஒரு வடையும்கொடுத்தார் டீக்கடைக்காரர். ஆனால், வடை கொடுக்க போலீஸார் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதனால், கைதிகள் டீயுடன் வடையையும் வெளியே வீசி எறிந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் பரபரப்புஏற்பட்டது.

இதேபோல், மாலையில் வேறு ஒரு வழக்கில், அல் உம்மா இயக்கத்தினர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களும் இதே போல டீ, வடை கேட்டு தகராறு செய்தனர். இதையடுத்து, அவர்களது வக்கீல்கள் வந்துசமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+