ஆண் துணை இல்லா பெண்கள்: ராணுவம் துன்புறுத்தியதா?
பாரமுலா:
காஷ்மீரின் பாராமுலா நகரத்திலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் திங்கள்கிழமைமுழு அடைப்பு நடத்தப்பட்டது. பாதுகாப்பு படையினர் பெண்களை தொந்தரவுசெய்ததாக கூறி பெண்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த பகுதிகளிலுள்ள அனைத்து கடைகளும், வர்த்தக நிறுவனங்களும்மூடப்பட்டிருந்தன. அரசு அலுவலகங்களின் பணியும், கல்வி நிறுவனங்களின்செயல்பாடும் பாதிக்கப்பட்டன.
பாதுகாப்புப்படையினர் வீடுவீடாக தேடுதல் பணயில் ஈடுபட்ட போது கிராமப்பெண்களை துன்புறுத்தியதாக கூறி நூற்றுக்கணக்கான பேர் போராட்டத்தில்ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினருக்கு எதிராககோஷங்கள்எழுப்பினர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில். பாதுகாப்பு படையினர் சோதனை செய்வதாக கூறிஒரு குறிப்பிட்ட வீட்டிலேயே மீண்டும் மீன்டும் சோதனை செய்தனர். அந்த வீட்டில்ஆண்கள் யாரும் கிடையாது.
அந்த வீட்டிலிருந்த பெண்களை மானபங்கபடுத்தவும் முனைந்தனர் என குற்றம்சாட்டினர்
செவ்வாய்க்கிழமை காலையும் ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால்அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது
அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க அங்கு காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது எனஅதிகாரிகள் கூறினர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications