நியூசிலாந்தில் தீ வைத்து கொளுத்தப்பட்ட இந்தியர்
சிட்னி:
நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் இந்தியர் ஒருவர் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தப்பட்டார்.
இது சம்பந்தமாக ஒரு இந்தியப் பெண்ணும், வேறு 2 ஐரோப்பிய ஆண்களும் போலீஸாரால் தேடப்பட்டு வருகின்றனர்.
கொளுத்தப்பட்ட இந்தியரின் பெயர் ஸ்வரன் சிங் (33). இவர் 10 ஆண்டுகளுக்கு முன் பஞ்சாபிலிருந்து இங்கு வந்தவர்.ஹாமில்டனில் பல பெரிய கடைகளுக்குச் சொந்தக்காரர். இவருக்கு 4 வயதில் ஒரு மகனும் உண்டு.
சம்பவம் நடந்தபோது, இவர் தன்னுடைய காரில் இருந்தாராம். திடீரென்று 3 பேர் அவர் மேல் பெட்ரோலை ஊற்றிக் கொளுத்திவிட்டார்களாம். ஆனால், உடனே சுதாரித்த ஸ்வரன் சிங், ரோட்டோரத்தில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் உருண்டு, புரண்டு தீயைஅணைத்து விட்டார்.
இருந்த போதிலும், அவர் தற்போது மருத்துவமனையில் "கோமா" நிலையில்தான் இருந்து வருகிறார். அவரைக் கொல்வதற்குமீண்டும் ஆட்கள் வரக்கூடும் என்பதால், அவருக்கு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதற்கான விசாரணையைச் சுறுசுறுப்புடன் போலீஸார் ஆரம்பித்துள்ளனர். ஸ்வரன் சிங் கொளுத்தப்படுவதற்குமுன், அதே ரோட்டில் சென்று கொண்டிருந்த பலரும் அந்த 3 பேரையும் பார்த்தார்களாம். சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயேஅவருடைய காரையும் கொளுத்தி விட்டார்கள் என்றும் வேறு சிலர் கூறினர்.
ஆனாலும், இதற்கு முன் எந்தக் கேஸிலும் ஸ்வரன் சிங் சம்பந்தப்படவில்லை என்பதை அறிந்த போலீஸார், பிறகு ஏன் இந்தக்கொலை முயற்சி என்று குழம்பிக் கொண்டிருக்கிறார்களாம்.
"கோமா"விலிருந்து மீண்டு, அவர் திரும்பவும் எழுந்து பேச ஆரம்பித்தால்தான், அவர் கொளுத்தப் பட்டதற்கான முழு விவரமும்தெரிய வரும். இதனால், ஸ்வரன் சிங்கின் கண் விழிப்புக்காக போலீஸார் இரவு பகலாகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications