கொளத்தூர் மணி கைதை எதிர்த்து போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்றபோது இவர் மூலமாகத் தான் அரசு வீரப்பனிடம் பேசி ராஜ்குமாரை மீட்டது.

இப்போது வீரப்பனைப் பிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் மணி மேட்டூரில் கைது செய்யப்பட்டார். தற்போதுசேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய அவரை அழைத்துச் சென்றபோது தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும் சிறை முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். கொளத்தூர் மணி மீது, அரசுக்கு எதிராக சதிசெய்தல், குற்றவாளிகளை மறைத்து வைக்க துணைபோதல், தெரிந்த தகவல்களை அதிகாரிகள் கேட்கும்போது சொல்ல மறுத்தல்ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மணி பேட்டி:

வீரப்பனைச் சரணடையச் செய்ய யாருடைய உதவியையும் ஏற்கத் தயார் என அறிவித்த அரசும் தேவாரமும் என்னைக் கைதுசெய்தது ஏன் என கொளத்தூர் மணி கேள்வி எழுப்பினார்.

நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் முன்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

வீரப்பனைச் சரணடைய செய்ய யாருடைய உதவியையும் ஏற்கத் தயார் என தேவராம் கூறியுள்ளார். அதே சமயம் வீரப்பனைச்சரணடையச் செய்ய உதவத் தயார் என நான் சொன்னேன். ஆனால் என்னைக் கைது செய்துள்ளனர்.

என்னைத் தேவையில்லாமல் திடீரென கைது செய்ததோடு, என் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விபரத்தையும்முழுமையாக வெளியில் போலீசார் தெரிவிக்கவில்லை. என்மீது இந்திய தண்டனைச் சட்டம் 212, 179, 124 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்

என்றார் கொளத்தூர் மணி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+