சென்யைைைச் சேர்ந்தவர் மீரட்டில் சுட்டுக் கொலை
மீரட்:
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள சிண்டிகேட் வங்கியில் வேலை செய்து வந்த சென்னையைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
சென்னை பெரம்பூர் வேணுகோபால்சாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் கே.வீரராஜன். இவருக்கு வயது (51). இவர்உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள சிண்டிகேட் வங்கியில் மானேஜராக பணியாற்றி வந்தார்.
திங்கள்கிழமை மாலை வீரராஜன் வங்கியைப் பூட்டி விட்டு தனது சக ஊழியர் ஒருவருடன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது திடீரென்று ஒரு வாலிபன் அவர்களைத் தடுத்து நிறுத்தினார்.
தன்னிடம் இருந்த துப்பாக்கியால் வீரராஜனை நோக்கி சுட்டார். பின்னர் வீரராஜன் கையிலிருந்த பையைப் பறித்துக் கொண்டுமோட்டார் சைக்கிளில் ஏறி தப்பித்துச் சென்று விட்டார்.
துப்பாக்கி குண்டு பட்டு உயிருக்குப் போராடிய நிலையில், வீரராஜன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால்மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் வீரராஜனின் பை மட்டும் ரோட்டில் கிடந்தது. இதில் இருந்த வங்கிசாவிகளும், தஸ்தாவேஜூகளும் காணாமல் போயிருந்தன. இந்தக் கொலைச் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications
