Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரிசி கிடங்கியில் அதிரடியாய் நுழைந்த பொன்முடி கைது

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:

அரிசி சோதனை செய்வதாகக் கூறி முன்னாள் தி.மு.க. அமைச்சர் பொன்முடி, விழுப்புரத்தில் உள்ள அரசு அரிசிக்கிட்டங்கிக்குள் பத்திரிகையாளர்களுடன் அதிரடியாக நுழைந்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

அங்கு சோதனை செய்து முடித்த பிறகு, முதல்வர் ஜெயலலிதா சொல்வது போல புழுத்துப் போன அரிசி எதுவும்இல்லை என்று தற்போதைய விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏவுமாகவும் இருக்கும் பொன்முடி கூறினார்.

முந்தைய தி.மு.க. ஆட்சியில் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு விநியோகிப்பதற்காக கிடங்குகளில் வைத்திருந்தஅரிசி எல்லாம் புழுத்துப் போன, புழு, பூச்சிகள் நிறைந்த அரிசி என்று கடந்த 15 நாட்களுக்கு முன் முதல்வர்ஜெயலலிதா புகார் கூறியிருந்தார்.

இது தொடர்பாக, முன்னாள் தி.மு.க. அரசு மீது விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்தப்புழுத்த அரிசி விவகாரத்தில் முன்னாள் உணவு அமைச்சர் கே.என். நேரு உள்பட பல பேரும் கைதாவார்கள் என்றுதமிழகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

ஆனாலும், தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்பட அனைத்து தி.மு.கவினரும் இதை வன்மையாக மறுத்து வந்தனர்.கடந்த வாரம்கூட, இந்த புழுத்துப் போனதாகக் கூறப்படும் இந்த அரிசியைக் கேரளாவிற்கு விற்பதற்காக முயற்சிசெய்கிறது என்று கருணாநிதி, அ.தி.மு.க. அரசு மீது பதில் புகார் கூறியிருந்தார். இதற்கான கடிதத்தின் நகல்ஒன்றையும் அவர் பத்திரிகையாளர்களிடம் காண்பித்தார்.

இந்நிலையில், விழுப்புரம் தொகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் பொருள் வாணிபக் கிடங்கிற்குசெவ்வாய்க்கிழமை திடீரென்று சென்று ஆய்வு நடத்திய பொன்முடி, நிருபர்களையும் அப்போது உடன் அழைத்துச்சென்றார்.

அந்த வாணிபக் கிடங்கு அலுவலர்களிடம், புழுத்த அரிசி மூட்டைகளை அடையாளம் காட்டுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அந்த அலுவலர்கள் காட்டிய 30 மூட்டைகளில் இருந்து மாதிரி அரிசி எடுத்துக் காண்பிக்கப்பட்டது.இது தவிர, அப்போது ரேஷன் கடைகளுக்கு எடுத்துச் செல்லப் படுவதற்காகக் காத்துக் கொண்டிருந்த மூட்டைகளில்இருந்தும், மாதிரி அரிசி எடுக்கப்பட்டது.

இந்த 2 மாதிரி அரிசியின் தரத்திலும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை நிருபர்களிடம் காட்டி விளக்கினார்பொன்முடி. அந்த மாதிரி அரிசியில் புழு, பூச்சிகளோ, அழுகிய நாற்றமோ இருக்கவில்லை. ஆனால்,அரிசியெல்லாம் கறுப்பாக இருந்தது.

கடந்த 15 நாட்களுக்கு முன் முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் உள்ள தன் அலுவலகத்தில்,செய்தியாளர்களுக்குக் காட்டிய அரிசியில் புழு, பூச்சிகள் நெளிந்ததை எல்லோரும் டி.வி.யில் பார்த்ததுநினைவிருக்கலாம்.

இந்நிலையில், தற்போது நிருபர்களை அழைத்து வந்த பொன்முடி, "இது புழுத்துப் போன அரிசிதானா என்பதைநீங்கள்தான் சொல்ல வேண்டும்" என்று அவர்களிடமே அரிசியைக் கொடுத்தார்.

நிருபர்களும் வேறு என்ன செய்வார்கள்? கொடுத்த அரிசியை வாயில் போட்டு ருசி பார்த்த்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+