துபாய் லாட்டரியில் ரூ 2.4 கோடி வென்றார் இந்தியர்
துபாய்:
ஐக்கிய அரபு நாட்டில் வசித்து வரும் இந்தியர் லாட்டரியில் ரூ. 24 மில்லியன் வென்றுள்ளார்.
தலைநகர் அபுதாபியில் உள்ள மஷ்ரீஹ் வங்கி அறிமுகப்படுத்திய ஒரு சேமிப்புத்திட்டத்தின் 6 வது ஆண்டு விழாவையொட்டிநடத்திய பரிசுப்போட்டியில் கலந்து கொண்டு இந்த மெகா தொகையைப் பரிசாகப் பெற்றார் இந்த அதிர்ஷ்டக்கார இந்தியர்.
அபுதாபியில் வசித்து வரும் இவர் பெயர் காலித் ஜமீல் வஞ்சாரா. வங்கியின் சேமிப்புத் திட்டத்தில் நடத்தப்பட்ட குலுக்கல்போட்டியில் கோடிகளை வென்ற இவருக்கு மஷ்ரீஹ் வங்கி மேலும் பல பரிசுகளையும் வழங்கியுள்ளது.
25 வயதான ஜமீல் கம்ப்யூட்டர் நிபுணர். வியாபார விஷயமாக தனது சொந்த நாடான இந்தியா வந்திருந்த இவருக்கு, பரிசுகிடைத்த விவரத்தை இவரைத் திருமணம் செய்யப்போகும் பெண் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.
பரிசு கிடைத்தது குறித்து இவர் கூறுகையில், முதலில் ரூ 24 மில்லியன் பரிசு விழுந்திருப்பது குறித்துத் தெரிந்து கொண்டதும் சிலநிமிடங்கள் என்னால் எதுவுமே பேச முடியவில்லை. இந்தத் தகவலை என் அப்பாவிடம் தெரிவிப்பதற்கு முன் இது குறித்து உறுதிசெய்து கொண்டேன் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
ஜமீல் அபுதாபியில் தனது தந்தை நடத்தி வரும் வர்த்தக நிறுவனத்தைக் கவனித்து வருகிறார். இவர் அடிக்கடி வியாபாரவிஷயமாக இந்தியாவுக்கும், அபுதாபிக்கும் விமானத்தில் பறந்து கொண்டிருப்பவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஆயிரம் பாதுகாப்பு கொடுத்தாலும்.. 'இது' மட்டும் குறையவேயில்லை.. RBI வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்! -
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications