அமெரிக்க துணை அதிபர்-சோனியா சந்திப்பு
வாஷிங்டன்:
அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அமெரிக்கதுணை அதிபர் டிக் செனேவை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
அனைத்து துறைகளிலும் இந்தியாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று செனேவிடம்கேட்டுக் கொண்டார் சோனியா.
சோனியா காந்தியும், செனேவும் சுமார் 25 நிமிடங்கள் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின்போது, பாகிஸ்தான்அதிபர் முஷாரப்பின் இந்திய வருகை, காஷ்மீர் பிரச்சனை உள்பட பல விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.
காஷ்மீர் பிரச்சனை குறித்து வாஜ்பாய்-முஷாரப் நடத்தும் பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் முழு ஒத்துழைப்புக்கொடுக்கும் என்று சோனியா உறுதியளித்தார்.
இந்த சந்திப்பின்போது இந்தியாவுடன் உள்ள உறவை மேம்படுத்திக் கொள்ள அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்விரும்புகிறார் என்பதை செனே, சோனியாவிடம் கூறினார்.
முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் இந்திய வருகையும், இந்திய பிரதமர் வாஜ்பாயின் அமெரிக்கசுற்றுப்பயணமும் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை மேம்படுத்தியுள்ளது என்றும் கூறினார்.
முன்னதாக சோனியா காந்தி 4 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நியுயார்க் சென்றார். அங்குவாழும் இந்தியர்கள் சோனியா காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications