மன்னிப்பு வழங்கினால் சரணடைகிறேன்: வீரப்பன்
சென்னை:
பொதுமன்னிப்பு வழங்கினால் சரணடையத் தயாராக இருக்கிறேன் என்று சந்தனக் கடத்தல் வீரப்பன்தெரிவித்துள்ளார்.
இவர் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் மூலம் இரு மாநில அரசுகளுக்கும் கேசட் அனுப்பியுள்ளார்.இந்தக் கேஸட்டை நெடுமாறன் நிருபர்களுக்குப் போட்டுக் காட்டினார்.
கேஸட்டில் வீரப்பன் பேசியிருப்பதாவது:
நெடுமாறன் ஐயாவுக்கு வணக்கம். அதிரடிப்படையினரின் அத்துமீறிய செயலால் மலை வாழ் மக்கள் எத்தகையதுன்பம் அடைந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
அதனால் நான் ஒரு புதிய முடிவுக்கு வந்துள்ளேன். தமிழக முதல்வருக்கும், கர்நாடக முதல்வருக்கும் எனதுபணிவான வணக்கங்கள்.
10, 000 க்கும் மேற்பட்ட அதிரடிப்படையினர், எல்லைப் பாதுகாப்புப் படையினர் என்னைத் தேடி வருவதை நான்அறிவேன். தேடுதல் வேட்டையின் தீவிரத்தைக் கண்டு நான் ஒரு துளி கூட அஞ்சவில்லை.
ஏற்கனவே என்னைப் பிடிப்பதற்காக அனுப்பப்பட்ட அதிரடிப்படையினர் மலைவாழ் மக்களைத் துன்புறுத்தி,பெண்களை கற்பழித்துச் சென்றனர்.
என்னால் அப்பாவி மக்கள் மீண்டும், மீண்டும் பாதிக்கப்படுவதையும், பிழைக்கவே முடியாமல்அச்சுறுத்தப்படுவதையும் நான் விரும்பவில்லை.
நாட்டு மக்களின் வரிப்பணம் நல்ல முறையில் செலவிடப்படாமல் என்னைத் தேடுவதற்குச் செலவிடப்படுகிறது.
எனவே இரு மாநில அரசுகளும் சேர்ந்து எனக்குப் பொதுமன்னிப்பு வழங்கத் தயாராக இருந்தால் நான் மக்கள்முன்னிலையில் சரணடையத் தயாராக இருக்கிறேன்.
நான் இப்போதும் பலமுறை பல இடங்களில் அதிரடிப்படையினரையும், துணை ராணுவத்தையும் நேருக்கு நேராகசந்தித்தும் ஒதுங்கிப் போகிறேன்.
அதற்குக் காரணம் நான் அமைதியாக வாழ விரும்புவது மட்டுமல்ல. தேவையில்லாமல் ரத்தம் சிந்துவதையும்,உயிர்ச்சேதம் ஏற்படுவதையும் விரும்பவில்லை.
என்னுடன் ஏற்கனவே தொடர்பு கொண்ட தமிழ்நாடு விடுதலைப்படை மற்றும் தமிழ் தேசிய மீட்புப்படை முடிவுபற்றி எனக்குத் தெரியாது.
பொதுமன்னிப்பு அளித்தால் நான் சரணடையத் தயாராக இருக்கிறேன். அதனால் நெடுமாறன் தலைமையில் 10பேர் கொண்ட தூதுக்குழுவை அனுப்பினால் நல்லது என எதிர்பார்க்கிறேன்.
எனது முடிவை உதாசீனப்படுத்தி, தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினால் தற்காப்புக்காகத் தாக்குதல் நடத்தவேண்டி வரும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்தக் கேஸட்டில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications