நிருபரை விடுவிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்: ஜெ
சென்னை:
சன் டிவி நிருபரை விடுகலை செய்ய வேண்டும் என பத்திரிக்கையாளர்கள் விடுத்துள்ள கோரிக்கையை பரிசீலிப்பதாக தமிழகமுதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.
விழுப்புரத்தில் இருக்கும் அரசு தானிய கிட்டங்கிக்கு முன்னாள் தமிழக அமைச்சரும், தற்போதைய தி.மு.க.எம்.எல்.ஏவுமானபொன்முடி செவ்வாய்க்கிழமை சென்றார்.
அங்கு வைக்கப்பட்டிருக்கும் அரிசி தரமான அரிசிதான். புழுத்த அரிசி இல்லை என நிரூபிப்பதற்காக அவர் அங்கு சென்றார்.அவருடன் சில நிருபர்களும், தி.மு.க. பிரமுகர்களும் சென்றனர்.
அரசு குடோனுக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும்,அரசு அதிகாரிகளை கடமையை செய்யவிடாமல் தடுத்ததாகவும் பொன்முடி மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு சன் டிவி நிருபர் சுரேஷ் கைது செய்யப்பட்டார். இவர் மீது கொலை மிரட்டல் வழக்கு உள்பட 5பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஜாமீனில் வெளிவர முடியாதபடி கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் 15 நாட்கள் காவலில் கடலூர்சிறையில் அட்ைக்கப்பட்டுள்ளார்.
பத்திரிக்கையாளர் போராட்டம்:
இதனால் பத்திரிக்கையாளர்கள் கோபமடைந்து சன் டிவி நிருபரை விடுதலை செய்ய வேண்டுமென்று வியாழக்கிழமைபோராட்டத்தில் இறங்கினர். முதல்வரை சந்தித்து மனு கொடுக்க முயன்றனர்.
முதல்வர் அவர்கள் மனுவை பெறாமல் செல்ல முயன்ற போது அவரது காரை மறிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்ததால்அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பத்திரிக்கையாளர்களை தடுத்து முதல்வர் செல்ல வழி ஏற்படுத்த போலீசார் முயன்ற போது சில பத்திரிக்கையாளர்களுக்கு சிறுகாயம் ஏற்பட்டது.
இதனால் கோபமடைந்த பத்திரிக்கையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சாலைபோக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
வியாழக்கிழமை மாலை சென்னை நிருபர்கள் சங்கத்தில் சன் டிவி நிருபர் மீது பொய் வழக்கு போட்டதற்கு கண்டன தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்குள் சன் டிவி நிருபர் சுரேஷ் விடுதலை செய்யப்படாவிட்டால் வாயில் கறுப்புத்துணி கட்டிகோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்த அந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த விஷயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க 5 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
நிருபர் விடுதலை குறித்து பரிசீலனை:
இந்நிலையில் சன் டிவி நிருபரை விடுதலை செய்வது குறித்து பரிசீலிப்பதாக முதல்வர் உறுதியளித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தின் முன் மறியலில் ஈடுபட்டிருந்த நிருபர்கள் முதல்வரின் செயலாளர் கரியாலிடம் மனு கொடுத்தனர். அந்தமனுவில் சன் டிவி நிருபர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.
இதையடுத்து பத்திரிக்கை சங்க பிரதிநிதி ஒருவரை வரவழைத்து வியாழக்கிழமை மாலை முதல்வர் பேசினார். அப்போதுபத்திரிக்கையாளர்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications