நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் சந்திரிகா அரசு வெற்றி பெறும்
கொழும்பு:
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் சந்திரிகா அரசு வெற்றி பெறும் என்று பிரதமரும் தற்காலிக அதிபருமான ரத்னஸ்ரீவிக்ரமநாயகே தெரிவித்தார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி, சந்திரிகா அரசுக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ளநம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு குறித்து ஜூலை 19 ம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும்.
அதற்கு முன்னதாக, தொடர்ந்து 4 நாட்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்படும் என்றும் விக்ரமநாயகேகூறினார்.
இதுகுறித்து, அவர் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது:
அதிபர் சந்திரிகா அரசுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் தாக்கல் செய்துள்ளது. இதன் மீதானவாக்கெடுப்பு மற்றும் விவாதத்தை விரைவில் நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். சந்திரிகா அரசு இதில் நிச்சயமாகவெற்றியடையும்.
இலங்கை மக்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் சந்திரிகா அரசு பிழைக்குமா என்பது குறித்துத் தெரிந்து கொள்ள மிகவும்ஆர்வமாக இருக்கும் இவ்வேளையில், வாக்கெடுப்பைத் தள்ளிப்போட இலங்கை அரசு விரும்பவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி, புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு உதவி செய்வதாக உறுதியளித்து, சில தமிழர்கட்சிகளிடமிருந்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாகக் கையெழுத்து வாங்கியுள்ளன என்று கூறியுள்ளார்.
முன்னதாக, ஆளும் கட்சியான மக்கள் கூட்டணிக்கு ஆதரவளித்து வந்த இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவைவாபஸ் பெற்றுக் கொண்டதையடுத்து, நாடாளுமன்றத்தில் சந்திரிகா அரசு தனது பெரும்பான்மை பலத்தை இழந்தது என்பதுநினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications