அரசு- பத்திரிக்கைகள் உறவை கருணாநிதி கெடுக்கிறார்: ஜெ. குற்றச்சாட்டு
சென்னை:
அதிமுக அரசுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் இடையிலுள்ள உறவை சீர்குலைக்க முயற்சி செய்கிறார் கருணாநிதிஎன்று குற்றம்சாட்டியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
சன் டிவி நிருபரை விடுதலை செய்யக்கோரி போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டுள்ளபத்திரிக்கையாளர்களுக்கு முழு பாதுகாப்பும் கொடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ராஜ்பவனில் வெள்ளிக்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கைது செய்யப்பட்ட சன் டிவி நிருபரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி பிற பத்திரிக்கையாளர்கள்போராட்டம் நடத்தினர்.
சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் இல்லம் அருகே வாயில் கருப்புத்துணியைக் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தினர்.
இவர்கள் போராட்டம் நடத்துவதற்கு ஏற்கனவே வியாழக்கிழமை போலீசாரிடம் அனுமதி வாங்கவில்லை.அதனால்தான் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாரோ சிலர் (கருணாநிதி) தூண்டிவிடுவதன் காரணமாகத்தான் பத்திரிக்கையாளர்கள் போராட்டம்நடத்துகிறார்கள்.
அதிமுக அரசு எப்போதும் பத்திரிக்கையாளர்களுடன் நல்லுறவையே வைத்துக் கொள்ளும். அதில் எவ்விதசந்தேகமும் இல்லை.
விழுப்புரத்தில் உள்ள தமிழக அரசு தானிய கிட்டங்கியில் அத்துமீறி நுழைந்தது தொடர்பாகத்தான் சன் டிவி நிருபர்சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுரேஷ் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுமா என்பது குறித்து தற்போது நான் எதுவும் கூற முடியாது.நிருபர்கள் எப்போது வேண்டுமானாலும் முதல்வரை சந்தித்துப் பேசலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை.
முந்தைய திமுக அரசின்போது ஜெயா டிவி மற்றும் ஸீடிவி நிருபர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது யாருமேபோராட்டம் நடத்தவரவில்லை.
முன்னதாக, மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளபத்திரிக்கையாளர்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விடுதலை செய்யப்படலாம். அவர்கள் மேல் எந்தவழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றார்.
தேர்தலின்போது அடையாள அட்டை காட்டாமல் வாக்களித்த ரஜினியைத் தட்டிக் கேட்ட ஏசியா நெட் டிவிநிருபரின் மூக்கை ரஜினியின் உதவியாளர் உடைத்ததும் நினைவிருக்கலாம். எல்லோரிடமும் அடி வாங்கும்நிலைக்கு நிருபர்கள் தள்ளப்பட்டுவிட்டது வேதனைக்குரியது தான் என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications