அ.தி.மு.கவின் பழிவாங்கும் நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கருணாநிதியைக் கைது செய்ததன் மூலம் அ.தி.மு.க. ஆட்சி தனது பழிவாங்கல்நடவடிக்கையை தொடங்கிவிட்டது.

தி.மு.க, தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டுள்ளது அ.தி.மு.க. அரசு பழிவாங்கும்நடவடிக்கையில்தான் ஈடுபட்டு வருகிறது என்பதை உறுதி செய்யும் விதமாகஅமைந்துள்ளது.

1991ம் ஆண்டு முத்ல 1996ம் ஆண்டுவரை அ.தி.மு.க. ஆட்சி செலுத்தியது. அப்போதுஜெயலலிதா முதல்வராக இருந்து வந்தார். அ.தி.மு.க.ஆட்சியில் ஊழல்பெருகிவிட்டதாக தி.மு.கவினர் குற்றம் சுமத்தி வந்தனர்.

1996ம் ஆண்டு தேர்தல் வந்தது. தனது கருத்துக்களையும், ஜெயலலிதா செய்தஊழல்களையும் மக்கள் மன்றம் முன் எடுத்து வைத்தது தி.மு.க. மக்கள் ஆதரவைஅமோகமாக பெற்று ஆட்சி பீடத்தில் அமர்ந்தது தி.மு.க. ஜெயலலிதா தோற்றுப்போனார்.

ஆட்சிக்கு வந்தவுடனேயே அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல்களை விசாரிக்க தனிநீதிமன்றம் அமைத்தது தி.மு.க. அரசு. ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும்அமைச்சரவை சகாக்கள் மீதும் ஊழல் வழக்கு தொடுக்கப்பட்டது.

ஜெயலலிதா மீது கலர் டிவி வாங்கியதில் ஊழல், இலவச வேட்டி, சேலை வழங்கியதில்ஊழல். சுடுகாட்டுக்கு கூரை அமைத்ததில் ஊழல், டான்சி நில பேர ஊழல்,கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டலுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியது,நிலக்கரி இறக்குமதி ஊழல், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது உள்ளிட்டபல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இதற்கான விசாரணைகள் தொடர்ந்து தனி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்னமும்சில வழக்குகள் நடந்து வருகின்றன.

கலர் டிவி ஊழல் வழக்கிலும், இலவச வேட்டி சேலை ஊழல் வழக்கிலும் ஜெயலலிதாவிடுதலை செய்யப்பட்டார். பிளசன்ட் ஸ்டே ஓட்டலுக்கு முறைகேடாக அனுமதிவழங்கிய வழக்கில் ஜெயலலிதாவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை கேட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் கொதித்தனர். இதை எதிர்த்து நடந்தகலவரத்தில் கோவை வேளாண்மை கல்லூரியை சேர்ந்த பஸ் கொளுத்தப்பட்டது.இதில் 3 மாணவிகள் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். இது ஜெயலலிதாவிற்குபெரும் பிரச்சனையை கிளப்பிவிட்டது.

நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கிலும் ஜெயலலிதாவுக்கு இரண்டு ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

நாளொரு வழக்கும், பொழுதொரு விசாரணையுமாக ஜெயலலிதா தன் மீதுசுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை சந்த்தித்து வந்தார்.

இந் நிலையில் 5 ஆண்டு காலம் கடந்துவிட்டது, தேர்தலும் வந்துவிட்டது. அப்போதுடான்சி நில பேர ஊழல் வழக்கின் தீர்ப்பு தனி நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டது. இதில்ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டுகாலம் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+