சிறையில் கருணாநிதி உண்ணாவிரதம்
சென்னை:
சென்னை சென்ட்ரல் ஜெயிலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
கருணாநிதி வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் கைது செய்யப்பட்டார். போலீஸார் அவரை அடித்து, இழுத்துக் கொண்டுசென்றனர்.
சிபிசிஐடி அலுவலகம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், வேப்பேரி போலீஸ் ஸ்டேஷன் என்று பல இடங்களுக்கும்அலைக்கழிக்கப்பட்ட கருணாநிதியை, கடைசியாக நீதிபதி அசோக்குமார் வீட்டுக்குப் போலீஸார் அழைத்துச் சென்றனர்.
வீட்டிலேயே முதற்கட்ட விசாரணையை நடத்திய நீதிபதி, வரும் ஜூலை மாதம் 10ம் தேதி வரை கருணாநிதியை ஜெயில் காவலில்வைப்பதற்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, கருணாநிதி சென்னை சென்ட்ரல் ஜெயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், தனக்கு மருத்துவப்பரிசோதனை எதுவும் செய்யப்படவில்லை என்று கூறி ஜெயில் வாசலிலேயே அவர் தர்ணா இருந்தார்.
ஆனால், ஜெயிலுக்கு வெளியே திமுக தொண்டர்களின் ஆவேசம், மிகவும் சீரியஸாக ஆனதையடுத்து, தானாகவே எழுந்துநடந்து ஜெயிலுக்குள் சென்றுவிட்டார் கருணாநிதி.
இதனிடையே, சென்னை மாநகர மேயரும், கருணாநிதியின் மகனுமாகிய ஸ்டாலின் சனிக்கிழமை காலை நீதிபதி முன்சரணடைந்தார். இதைத் தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டு, சென்ட்ரல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கருணாநிதியை வேலூர் ஜெயிலுக்கும், ஸ்டாலினை மதுரை ஜெயிலுக்கும் மாற்றப் போவதாகத் தகவல்வந்ததையடுத்து, அதை எதிர்க்கும் விதமாக கருணாநிதி உணவு எதுவும் சாப்பிடாமல் இருந்து வருகிறார்.
காலையிலிருந்தே அவருக்கு மருத்துவ வசதிகள் எதுவும் அளிக்கப்படவில்லை என்பதற்காகவும் கருணாநிதி உண்ணாவிரதம்இருந்து வருகிறார்.
சனிக்கிழமை காலையில் ஜெயிலில் அடைக்கப்பட்டதில் இருந்து, அவர் இதுவரை எதுவும் சாப்பிடவில்லை என்றுகூறப்படுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications