மதுரை ஜெயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டார் ஸ்டாலின்
சென்னை:
சனிக்கிழமை காலை சரணடைந்த பின் கைது செய்யப்பட்ட சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலின், பிற்பகல் மதுரைஜெயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
முன்னதாக, முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து,ஸ்டாலின் வீட்டையும் போலீஸார் முற்றுகையிட்டனர்.
ஆனால் காரில் பெங்களூர் சென்று கொண்டிருந்த ஸ்டாலின், கருணாநிதியின் கைதைக் கேள்விப்பட்டதும் உடனடியாக சென்னைதிரும்பினார். எப்படியும் போலீஸார் தன்னைக் கைது செய்ய வருவார்கள் என்று நினைத்த ஸ்டாலின், தானாகவே நீதிபதிஅசோக்குமார் முன்னிலையில் சரணடைந்தார்.
இதைத் தொடர்ந்து, அவரும் கைது செய்யப்பட்டு, சென்னை சென்ட்ரல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கருணாநிதியை வேலூர் ஜெயிலுக்கும், ஸ்டாலினை மதுரை ஜெயிலுக்கும் மாற்றப் போவதாகத் தகவல்வந்ததையடுத்து, அதை எதிர்க்கும் விதமாக கருணாநிதி உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
காலையிலிருந்தே அவருக்கு மருத்துவ வசதிகள் எதுவும் அளிக்கப்படவில்லை என்பதற்காகவும் கருணாநிதி உண்ணாவிரதம்இருக்க ஆரம்பித்தார் என்று கூறப்படுகிறது.
ஆனால், ஸ்டாலினை மதுரை ஜெயிலுக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவு வந்ததையடுத்து, அவரை மதுரைக்குக் கொண்டுசெல்லவேண்டிய நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டனர்.
மதுரைக்குக் கிளம்புவதற்கு முன்னர், அவர் ஒரு ரெஜிஸ்டரில் கையெழுத்துப் போடவேண்டும என்று போலீஸார் கூறியுள்ளனர்.ஆனால், கையெழுத்துப் போட மறுத்துவிட்டார் ஸ்டாலின்.
இதையடுத்து, ஒரு போலீஸ் வேனில் ஏற்றப்பட்ட ஸ்டாலின், மதுரை ஜெயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications