பிரதமர் உத்தரவுக்கு பணிந்தார்: மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார் பாத்திமா பீவி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சென்னையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கருணாநிதி கைது செய்யப்பட்டு அடித்து இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் முதல் நடந்தஅனைத்து சம்பவங்கள் குறித்தும் தமிழக ஆளுநர் பாத்திமா பீவி மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
கருணாநிதி, ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்துஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்குள் அறிக்கை தர வேண்டும் என்று வாஜ்பாய் தமிழக ஆளுநர் பாத்திமா பீவிக்கு கெடு விதித்திருந்தார் .
இதையடுத்து தமிழக காவல்துறை அதிகாரிகளிடம் நடந்த சம்பவம் குறித்து விவரங்களைக் கேட்டறிந்த தமிழக ஆளுநர் பாத்திமா பீவி,கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து பிரதமருக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications