சிறப்பு விமானத்தில் வந்த மத்திய அரசு அதிகாரிகள் குழு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கருணாநிதி கைது குறித்து விசாரணை நடத்துவதற்காக மத்திய உள்துறை சிறப்பு செயலாளர் எம்.பி.குஷால் தலைமையில் ஒருகுழு சென்னை வந்துள்ளது.
இந்தக் குழு கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி பிரதமருக்கு அறிக்கை தரவுள்ளது. இந்தக்குழுவும் தற்போது கவர்னர் மாளிகையில் முகாமிட்டுள்ளது.
இவர்கள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனை மருத்துவனையில் சந்தித்துப் பேசினார். பின்னர் பாலுவைச் சந்திக்க அவர்கள்வேலூர் சென்றனர்.
இவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்தக் குழு தமிழக காவல்துறைஅதிகாரிகளிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவார்கள்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications