மத்திய அமைச்சர்கள் கைது .. புதிய சட்ட சிக்கல்
சென்னை:
மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம் புதிய சட்ட சிக்கல்எழுந்துள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன் மற்றும்டி.ஆர்.பாலு கைது செய்யப்பட்டுள்ளனர். கருணாநிதியின் வீட்டில் போலீஸாருடன் தகராறு செய்து அவர்களை கடமையாற்றவிடாமல் தடுத்ததாக இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முரசொலி மாறனை நேரில் சந்தித்த மாஜிஸ்திரேட்கைது தொடர்பான உத்தரவை கொடுத்தார். அவர் சிகிச்சை பெற்று வருவதால் அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. ஆனால்டி.ஆர். பாலு உடனடியாக கைது செய்யப்பட்டு வேலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டார்.
மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளது புதிய சட்ட சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மத்திய அமைச்சரை கைது செய்யவேண்டுமானால் மத்திய அமைச்சரவை செயலாளர் மற்றும் மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும். அப்படி இல்லாமல்ஒரு மத்திய அமைச்சர் கைது செய்யப்பட்டால் அதற்குக் காரணமான மாநில அரசு மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கைஎடுக்க முடியும் அதாவது ஆட்சியைக் கலைக்கக் கோரி குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை கூட செய்ய முடியும்.
இந்த நிலையில் இரண்டு மத்திய அமைச்சர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ள வகையில் மக்களவை சபாநாயகர் பாலயோகியும், மத்தியஅமைச்சரவைச் செயலாளரும் மாநில அரசியம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.
மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளது தொடர்பாக மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைபொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications