பாத்திமா பீவியை நீக்க ஜனாதிபதி ஒப்புதல்
டெல்லி:
மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று தமிழக ஆளுனர் பாத்திமா பீவியைபதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஊழல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, தி.மு.க, தலைவர் வெள்ளிக்கிழமை நள்ளிரவுகைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட போது போலீசார் முரட்டுத்தனமாகநடந்து கொண்டனர். இது நாடு முழுவதையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
கருணாநிதி கைது செய்யப்பட்ட போது நடந்த சம்பவங்கள் குறித்து அறிக்கைஅளிக்குமாறு பாத்திமா பீவியை பிரதமர் கேட்டுக் கொண்டார்.
ஆளுனர் அனுப்பிய அறிக்கையில், ஜெயலலிதாவை ஆதரித்தும், கருணாநிதி கைதுசெயய்ப்பட்ட போது போலீசார் நடந்து கொண்ட விதத்தை நியாயப்படுத்தியும் மேலும்தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை நல்ல நிலையில் இருக்கிறது எனவும்கூறியிருந்தார்.
இந்த அறிக்கை பற்றி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.ஆளுனரின் அறிக்கை தமிழகத்தின் உண்மை நிலையை எடுத்துக் கூறவில்லை என கூறிபாத்திமா பீவியை பதவி நீக்கம் செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்தது.
பாத்திமா பீவியை பதவிநீக்கம் செய்யுமாறு ஜனாதிபதிக்கும் பரிந்துரை செய்தது.மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று தமிழக ஆளுனர் பாத்திமா பீவியைபதவி நீக்கம் செய்ய ஜனாதிபதியும் ஒப்புதல் தெரிவித்துள்ளார்
அடுத்த ஆளுனர் நியமிக்கப்படும் வரை ஆந்திர ஆளுனர் சி. ரங்கராஜன் கூடுதலாகதமிழக ஆளுனர் பொறுப்பையும் கவனிக்க உள்ளார்.












Click it and Unblock the Notifications