ஜெயலலிதா ஆட்சியைக் கலைக்க பிரதமருக்கு பெர்னாண்டஸ் பரிந்துரை
டெல்லி:
தமிழகத்தில் உடனடியாக ஜெயலலிதா ஆட்சியைக் கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமலாக்க வேண்டும்என பிரதமருக்கு ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் குழு பரிந்துரை செய்துள்ளதாகத்தெரிகிறது.
கருணாநிதியை போலீசார் அடித்து இழுத்துச் சென்றது குறித்து விசாரித்து வருமாறு ஜார்ஜ் பெர்னாண்டஸ்தலைமையில் 3 பேர் குழுவை பிரதமர் வாஜ்பாய் சென்னை அனுப்பினார்.
இந்தக் குழு கருணாநிதியை சிறையில் சந்தித்தது. பின்னர் கருணாநிதியின் வீட்டுக்குச் சென்று அங்கு போலீசார்நடந்து கொண்ட முறை குறித்து விசாரித்தது. போன்களை உடைத்தது. தாழ்பாளை உடைத்தது போன்றவற்றைஇந்தக் குழு பார்த்தது.
பின்னர் டெல்லி விரைந்த இந்தக் குழு திங்கள்கிழமை பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்தது.
வாஜ்பாயிடம் பேசிய ஜார்ஜ் பெர்னாண்டஸ், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக சீர் குலைந்துவிட்டதாகக்கூறினார். தமிழகத்தில் அரசியல் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு அங்கு நிலைமை மிக மோசமாகஉள்ளதாகக் கூறிய ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடனடியாக தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியைக் கலைக்க வேண்டும்எனவும் அறிக்கை அளித்தாகத் தெரிகிறது.
அதே சமயம் இது தொடர்பாக முடிவெடுக்கும் முழு அதிகாரத்தையும் பிரதமருக்கு அளிப்பதாகவும் ஜார்ஜ்பெர்னாண்டஸ் குழு தெரிவித்துள்ளது.
மாலை 6 மணிக்கு கூடவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பெர்ணான்டசின் பரிந்துரை குறித்து பிரதமர்ஆலோசனை நடத்துவார். அந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் அடுத்து என்ன நடவடிக்கை என்பது குறித்துமுடிவெடுக்கப்படும்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications