குருவாயூர் சென்றார் ஜெ.
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிலா குருவாயூரில் தனது பிரார்த்தனைய நிறைவேற்றுவதற்காக திங்கள்கிழமை அதிகாலை குருவாயூர்புறப்பட்டுச் சென்றார்.
தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என ஜெயலலிதா பல கோவில்களில் சிறப்பு பூஜைகளும், யாகங்களும் செய்துவந்தார். தான் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானால் குருவாயூர் கோவிலுக்கு யானை காணிக்கை செலுத்துவதாகவேண்டிக் கொண்டார்.
தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானதும், தான் வேண்டிக் கொண்டபடி குருவாயூருக்கு காணிக்கை செலுத்த கண்னண் என்றயானையை வாங்கினார்.
அந்த யானையை ஜுன் மாதம் முதல் வாரத்தில் காணிக்கை செலுத்த முடிவு செய்திருந்தார். ஆனால் அரசியல் வேலைகள்காரணமாக அது இயலாமல் போனது. அதன் பின் மீண்டும் ஒரு நாள் குறிக்கப்பட்டு, அப்போதும் அவரால் குருவாயூர் செல்லஇயலாமல் போனது.
அவர் சென்ற மாதம் 30ம் தேதி, யானையை காணிக்கை செலுத்த குருவாயூர் வருவார் என குருவாயூர் தேவஸ்தானஅதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதையடுத்து, யானை காணிக்கை செலுத்தவதற்கு தேவையான அனைத்துஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
ஆனால் அதுவும் தள்ளிப்போடப்பட்டது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு, ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தி.மு.க. தலைவர் கைதுசெய்யப்பட்டதால் ஜெயலலிதா தனது பயணத்தை ஒத்தி வைத்தார் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், குருவாயூரில் பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்காக திங்கள்கிழமை அதிகாலை தனி விமானம் மூலம்ஜெயலலிதா குருவாயூர் புறப்பட்டுச் சென்றார்.
கருணாநிதி மற்றும் 2 மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திங்கள்கிழமைபந்த் நடைபெறுகிறது. இந்நிலையிலும் தான் வேண்டியபடி, காணிக்கையை செலுத்த ஜெயலலிதா குருவாயூர் சென்றுள்ளார்.
ஜெயலலிதா யானையை காணிக்கை செலுத்திய பின், கேரளாவில் உள்ள மேலும் 10 கோவில்களுக்கும் செல்வார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அவர் திங்கள்கிழமை இரவு சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது
யு.என்.ஐ.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications