குருவாயூரில் ஜெ.க்கு எதிராக பாஜக போராட்டம்: போலீஸார் தடியடி
குருவாயூர்:
கேரள மாநிலம் குருவாயூர் கோவிலுக்கு யானை காணிக்கை செலுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்றதும், அங்கு அவருக்குஎதிராக பாஜக தொண்டர்கள் கோஷமிட்டனர்.
இதையடுத்து அங்கு கலவரம் ஏற்பட்டது. போலீஸார் தடியடி நடத்தி பாஜக தொண்டர்களைக் கலைத்தனர். இந்தத் தடியடிச்சம்பவத்தில் 25 பாஜக தொண்டர்களுக்கு காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பாஜக தொண்டர்கள் 6 பேரைப் போலீஸார்கைது செய்தனர்.
முன்னதாக, தான் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வரானால் குருவாயூர் கோவிலுக்கு யானை காணிக்கைசெலுத்துவதாக வேண்டியிருந்தார் ஜெயலலிதா.
அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானதும், தான் வேண்டிக் கொண்டபடி குருவாயூருக்கு காணிக்கை செலுத்த"கண்ணன்" என்ற யானையை வாங்கினார்.
சென்ற மாதம் 30ம் தேதி, யானையை காணிக்கை செலுத்த அவர் குருவாயூர் வருவார் என குருவாயூர் கோவில் தேவஸ்தானஅதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதையடுத்து, யானை காணிக்கை செலுத்தவதற்கு தேவையான அனைத்துஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
ஆனால் அதுவும் தள்ளிப்போடப்பட்டது. வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல், ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தி.மு.க. தலைவர்கருணாநிதி கைது செய்யப்பட்டதால், ஜெயலலிதா தனது பயணத்தை ஒத்தி வைத்தார் என கூறப்பட்டது.
இந்நிலையில், குருவாயூரில் பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்காக திங்கள்கிழமை அதிகாலை சென்னையிலிருந்து தனிவிமானம் மூலம் குருவாயூர் வந்தார் ஜெயலலிதா.
திங்கள்கிழமை காலை குருவாயூர் கோவிலின் மேற்குவாயில் வழியே கோவிலுக்குள் நுழைந்தார். ஜெயலலிதா குருவாயூர்கோவிலுக்கு வந்த செய்தி தெரிந்ததும், ஏராளமான பாஜக தொண்டர்கள் கோவில் முன் குவிந்தனர்.
அவர்கள் ஜெயலலிதாவுக்கு எதிராகக் கோஷமிட்டனர். போலீஸார் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர். இதில் 25பேர்களுக்குக் காயம் ஏற்பட்டது. 6 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அங்கு பரபரப்பான சூழ்நிலைநிலவியது.
இதற்கிடையே, கோவிலின் கிழக்கு வாசல் வழியாக ஜெயலலிதா கோவிலுக்குள் நுழைந்துவிட்டார் என்று தகவல்கள்தெரிவிக்கின்றன.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications