ஜெ. மீது நடவடிக்கை: மத்திய அரசு முன் உள்ள வாய்ப்புகள் என்னென்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டெல்லியில் திங்கள்கிழமை மாலை பிரதமர் வாஜ்பாய் தலைமையில் கூடவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழகநிலைமை குறித்து தீவிரமாக விவாதிக்கப்படவுள்ளது.

கருணாநிதி கைது செய்யப்பட்டு அடித்து இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம், 2 மத்திய அமைச்சர்கள் கைது, தமிழகத்தில் முழுஅடைப்பு, பாத்திமா பீவி பதவிநீக்கம், ஜெயலலிதாவின் குருவாயூர் பயணம், அங்கு நடந்த போலீஸ் தடியடி என்ற பரபரப்பானசூழ்நிலையில் மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்குக் கூடுகிறது.

இந்தக் கூட்டத்தில் இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவுகளான 256, 257, அல்லது 355 அல்லது 356 ஆகிய பிரிவுகளில் எதைஅமல்படுத்துவது என்பது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.

வாய்ப்பு 1:

இந்திய அரசியல் சட்டத்தின் 256 மற்றும் 257வது பிரிவுகள் அமல்படுத்தப்பட்டால் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோரை உடனடியாக விடுவிக்க மத்தியஅரசால் மாநில அரசுக்கு உத்தரவிட முடியும். அதே போல சிறையில் அடைக்கப்பட்டுள்ள 24, 000 திமுக தொண்டர்களைவிடுவிக்கவும் அது வழிவகுக்கும்.

வாய்ப்பு 2:

355 வது பிரிவு அமல்படுத்தப்பட்டால் தமிழக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் மத்திய அரசின் நேரடிக்கட்டுப்பாட்டுக்குள் வரும். இந்தப் பிரிவு அமல்படுத்தப்பட்டால் தமிழக அரசு தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது.மத்திய அரசு பிறப்பிக்கும் உத்தரவுகளை மட்டுமே தமிழக அரசு செயல்படுத்த முடியும்.

வாய்ப்பு 3:

மத்திய அரசின் பிரம்மாஸ்திரம் என அழைக்கப்படும் 356 வது பிரிவு அமல்படுத்தப்பட்டால் தமிழகத்தில்ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தப்படும். ஜெயலலிதா ஆட்சி கலைக்கப்படும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கூறிய 3 பிரிவுகளில் தமிழகத்தில் எந்தப் பிரிவை அமல்படுத்துவது என்பது குறித்துமத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

மேலும் மத்திய உள்துறை சிறப்புச் செயலாளர் கவுஷல் தலைமையில் தமிழகம் வந்த குழுவினர் சமர்பித்த அறிக்கை குறித்தும்மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+