இடைக்கால ஆளுநராக ரங்கராஜன் நாளை பதவி ஏற்பு
சென்னை:
தமிழக இடைக்கால ஆளுநராக சி. ரங்கராஜன் செவ்வாய்க்கிழமை காலை பதவி ஏற்றுக் கொள்கிறார்.
தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவியை மத்திய அரசு திரும்ப அழைத்துக் கொண்டதையடுத்து, தன்னுடையபதவியை ஞாயிற்றுக்கிழமை மாலை பாத்திமா பீவி ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து, தற்போது ஆந்திர ஆளுநராக இருக்கும் ரங்கராஜன் தமிழக ஆளுநராகக் கூடுதலாகப்பொறுப்பேற்பார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டு அடித்து இழுத்துச் செல்லப்பட்டதையடுத்து நடந்த சம்பவங்கள்குறித்து சுயமாகவும், நடுநிலையுடனும் மத்திய அரக்கு ஆளுநர் பாத்திமா பீவி அறிக்கை அனுப்பி வைக்காதகாரணத்தால் அவரைத் திரும்ப அழைப்பது பற்றி மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைமுடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவி தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிகே.ஆர்.நாராயணனுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அனுப்பி வைத்தார். ஜனாதிபதியும் அதை ஏற்றுக் கொண்டார்.
செவ்வாய்க்கிழமை காலை சென்னைக்கு வந்து, தமிழக இடைக்கால ஆளுநராகப் பதவி ஏற்கவுள்ளார் ரங்கராஜன்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications