அரியலூர் அருகே அரசு பஸ்சுக்கு தீ வைப்பு
சென்னை:
தமிழகத்தில் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பையொட்டி, பல ஊர்களில்பஸ்களுக்குத் தீ வைப்பு, கல்வீச்சு போன்ற அசம்பாவிதச் சம்பவங்கள் நடந்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
அரியலூர் அருகே திருமானூர் பகுதியில் ஒரு கும்பல் அரசு பஸ்சுக்குத் தீ வைத்தனர். இதையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்புஏற்பட்டது.
புதுக்கோட்டை அருகே நகராட்சிக்குச் சொந்தமான ஜீப்புக்குத் தீ வைக்கப்பட்டது. தனியார் ஜீப் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டது.
திருச்சியில் சாலைமறியல் செய்ய முயன்ற 100 க்கும் மேற்பட்ட பாஜக மற்றும் எம்.ஜி.ஆர்.அதிமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.இங்குள்ள பி.எச்.ஈ.எல்.நிறுவனம் உள்பட பல தனியார் நிறுவனங்கள் குறைவான ஊழியர்களுடன் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.
அரியலூரில் பல சிமென்ட் தொழிற்சாலைகள் திறந்துள்ளன.
கோவையில் இதுவரை எந்த வித அசம்பாவிதச் சம்பவங்களும் நடக்கவில்லை. பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் திறந்துள்ளன.குறைவான மாணவ, மாணவர்களே பள்ளி, கல்லூரிகளுக்கு வந்துள்ளனர்.
மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே சாலைமறியலில் ஈடுபட முயன்ற 18 க்கும் மேற்பட்ட திமுக மற்றும் பாஜக தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மதுரையில் இதுவரை அசம்பாவிதச் சம்பவம் எதுவும் நடக்கவில்லை.
மதுரையில் பதட்டம் நிறைந்த பகுதிகளில் அசம்பாவிதச் சம்பவம் எதுவும் நடைபெறாத வகையில் போலீஸ் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வங்கிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.
மாநிலம் முழுவதும் பல இடங்களில் தனியார் போக்குவரத்து ஸ்தம்பிக்கப்பட்டுள்ளது. அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயங்கிவருகின்றன.
யு.என்.ஐ.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications