தமிழகம் முழுவதும் போலீஸார் குவிப்பு
சென்னை:
கருணாநிதியைக் கைது செய்து, அடித்து இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் திமுகதலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, திங்கள்கிழமை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ரூ.12 கோடி ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, சிபிசிஐடி போலீஸார் வெள்ளிக்கிழமைநள்ளிரவுக்குமேல் முன்னாள் முதல்வர் கருணாநிதியை கைது செய்து இழுத்துச் சென்றனர். கருணாநிதியைக் கைது செய்யும்போதுபோலீஸாரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக, மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோரையும்போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் முழு அடைப்புக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் அழைப்பு விடுத்தனர்.
இதையடுத்து எந்தவித அசம்பாவிதச் சம்பவமும் நடக்காமல் இருக்க தமிழகம் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோரைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 25, 000 க்கும் மேற்பட்ட திமுக பிரமுகர்கள், தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சென்னை நகரில் மட்டும் 17, 000 போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கருணாநிதியைக் கைது செய்து அடித்து, இழுத்துச் சென்ற போலீஸார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு மற்றும் சென்னை மேயர்ஸ்டாலின் ஆகியோரை விடுதலை செய்யக்கோரியும் முழு அடைப்பு கடைபிடிக்கப்படுகிறது.
யு.என்.ஐ.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications